Show all

வாழ்த்துக்கள் மம்தா பானர்ஜி! ஒன்றிய ஆட்சிக்கு முனையும்- ஒற்றைஇன, ஒற்றைமொழி, நலனுக்கான இரு கட்சிகளை அப்புறப்படுத்துங்கள்

பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி பெற்றிட்ட வெற்றிக்கு வாழ்த்துக்கள். ஒன்றிய ஆட்சிக்கு முனையும்- ஒற்றைஇன, ஒற்றைமொழி, நலனுக்கான பாரதிய ராஷ்ட்ரிய காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி ஆகிய இரு கட்சிகளை அப்புறப்படுத்துங்கள். இந்தியாவில் உண்மையான மக்களாட்சி மலர, மாநிலக் கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கு உங்கள் வெற்றி வித்தாக அமையட்டும்.

17,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: மேற்குவங்க மாநிலம் பவானிபூர் இடைத்தேர்தலில் அம்மாநில முதல்வர் மம்தாபானர்ஜி வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் பிரியங்காவை விட 58,832 வாக்குகள் கூடுதலாக பெற்று பெற்றுள்ளார். அவருக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்தே ஒன்றிய பாஜக அரசு என்னை ஆட்சியிலிருந்து அகற்ற பல சதித் திட்டங்களை தீட்டியது. எப்படியும் என்னை தோற்கடித்து விட வேண்டும் என முயன்றது. நான் தேர்தலில் போட்டியிடாதபடி என் காலில் காயம் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் அந்த அனைத்து சதிகளையும் மக்கள் முறியடித்து விட்டனர். எங்களுக்காக வாக்களித்த பொதுமக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் ஆணையத்துக்கும் எனது நன்றிகள் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்ற மம்தா பானர்ஜிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேற்குவங்க மக்கள் மம்தா பானர்ஜி மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை அவரது வெற்றி உறுதி செய்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,025.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.