Show all

கிட்டத்தட்ட 1.3 கோடியாம்! செல்பேசி கட்டண உயர்வால், கட்டணம் செலுத்த முடியாமல் செல்பேசி எண் இழந்தவர்கள்

ஒட்டுமொத்த செல்பேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1.3 கோடி குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செல்பேசி கட்டணங்களைப் பெரிதாக உயர்த்தியதால், கட்டணம் செலுத்த முடியாத லட்சக்கணக்கான ஏழை மக்கள் தங்கள் செல்பேசி எண்களை இழந்தனர் என இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

10,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட 15 தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் உள்ளிட்ட வகைகளில் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி பாக்கியை நள்ளிரவுக்குள் செலுத்துமாறு சில நாட்களுக்கு முன்னர் ஒன்றிய அரசின் தொலைத்தொடர்பு துறை அதிரடியாக உத்தரவிட்டது. இந்த உத்தரவு, அந்த தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களை அலற வைத்து விட்டது. என்பது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய பரபரப்புச் செய்தி. 

அதற்கு பின்பு அந்த நிறுவனங்கள், ஒன்றிய அரசுக்கு அந்தத் தொகையைச் செலுத்த- பத்தாண்டு இருபதாண்டு என்று காலக்கெடு கேட்டது, சில நிறுவனங்கள் பகுதியாக தொகை செலுத்தியது, பல நிறுவனங்கள் காணமல்போனது என்ற செய்திகளைத் தொடர்ந்து நடப்பில் இருந்து கொண்டிருக்கிற ஏர்டெல், ஜயோ, வோடாபேன் ஐடியா தங்கள் கட்டணங்களை இரண்டு முறை உயர்த்திக் கொண்டன. 

நடப்பில் உள்ள மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களும், செல்பேசி கட்டணங்களை மீண்டும் மீண்டும்  உயர்த்தியதால், கட்டணம் செலுத்த முடியாத லட்சக்கணக்கான ஏழை மக்கள் தங்கள் செல்பேசி எண்களை இழந்தனர் என்று இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது நடப்புச் செய்தியாகும்.

தொலைபேசி இல்லாத தற்போதைய வாழ்க்கை கேள்வி குறிதான். ஆடம்பரத் தேவையிலிருந்து அடிப்படைத் தேவையாக மாறிய தொலைபேசியின் கட்டண உயர்வு அதிகரித்து வருவதால் பெரும்பாலும் நசுக்கப்படுவது ஏழை எளிய மக்கள்தான்.

ஒட்டுமொத்த செல்பேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1.3 கோடி குறைந்துள்ளது. இப்படி செல்பேசி வாடிக்கையாளர்கள் குறைவதற்குக் கட்டண உயர்வு முதன்மையான காரணமாக இருக்கலாம், உயர்த்தப்பட்ட கட்டண உயர்வினால் இரண்டு செறிவட்டை (சிம்) வைத்திருந்தவர்கள் ஒன்றைக் கைவிட்டனர். இந்தக் கட்டண உயர்வு செல்பேசி எண்ணைக் கைவிட்டு விடக்கூடிய கட்டாய சூழலுக்கு மக்களைத் தள்ளியுள்ளது, கடந்த சில மாதங்களில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செல்பேசி கட்டணங்களைப் பெரிதாக உயர்த்தியதால், கட்டணம் செலுத்த முடியாத லட்சக்கணக்கான ஏழை மக்கள் தங்கள் செல்பேசி எண்களை இழந்தனர் என இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

அப்படி பாதிக்கப்பட்ட ஒருவர் தான், மும்பை நகரில் கூலி வேலை செய்யும் சுபோத் மோண்டல். 24 அகவையுள்ள இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தைத் தொடர்புகொண்டு பேசுவதெற்கென ஒரு தொலைபேசி இணைப்பை பயன்படுத்தி வந்துள்ளார். அண்மையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து, தனக்கு தொலைபேசி இணைப்பே வேண்டாமென தீர்மானித்து, குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள தொலைத்தொடர்புக்கு கட்டண பூத்துகளை நாடி வருகிறார். 

தனக்கென ஒரு செல்பேசி இருந்தபோது தனது மகன் மற்றும் மனைவியுடன் அன்றாடம் பேச முடிந்தது. ஆனால், இப்போது கிழமைக்கு ஒரு முறைதான் அவர்களுடன் பேசுகிறேன். அண்மைக்கால செல்பேசி கட்டணங்கள் அதிகரிப்பு தொலைபேசி இணைப்பு வைத்திருப்பதைக் கடினமாக்கியுள்ளது என வருத்தம் தெரிவித்துள்ளார். என்கிற செய்தியும் பெரிதாகப் பரவி வருகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,166.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.