Show all

தமிழ்நாடு இல்லை. சில இந்திய மாநிலங்கள் குட்டி இலங்கைகளாக ஆக மாறும் அபாயத்தில்! கடனில் சிக்கித் தவிக்கின்றன

மாநில அரசுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு, மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு மேலும் உதவ வேண்டும். மாநில அரசுகளின் வருவாயை வலுப்படுத்த ஒன்றிய அரசின் பொருளாதாரம் சார்ந்த அமைப்புகள் நிதி பரவலாக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று சாய் பரத்கர் கூறுகிறார்.

09,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியாவின் எல்லா மாநிலங்களையும் ஒப்பிடுபோது மகாராஷ்டிராவின் பொருளாதாரம் மிகப்பெரியது. மறுபுறம் தமிழ் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இலங்கையை விட மூன்று மடங்கு அதிகம்.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, உலகின் பல நாடுகளை விட அதிகமாக இருக்கும்.

கடந்த சில காலமாக பஞ்சாப் மாநிலம் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இது இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியுடன் ஒப்பிடப்படுகிறது. இத்தகைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக, இது போன்ற மாநிலங்கள் இப்போது குட்டி இலங்கை என்று கருதப்படுகின்றன.

பஞ்சாபின் கடன், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 53விழுக்காடு ஆகும். இது இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிக மிக அதிகம்.

மாநிலத்திற்கு மூன்று லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. அதாவது மூன்று கோடி மக்கள் தொகை கொண்ட பஞ்சாப் மாநிலத்தின் ஒவ்வொரு குடிமகனும் ஒரு லட்சம் ரூபாய் கடனில் புதையுண்டு கிடக்கிறார்.

வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றிப் பேசினால், இது 25 விழுக்காடாக உள்ளது. கடந்த ஆண்டில் மாநிலம்.75,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருந்தாலும், இது இலக்கை விட 20,000 கோடி ரூபாய் குறைவாகும்.

இந்த நிலையில்தான் பஞ்சாபில் புதியதாக ஆட்சிக்கு வந்துள்ளது ஆம் ஆத்மி அரசு. இன்னும் மூன்று மாதங்களில் மக்களுக்கு மாதம்தோறும், 300 அலகு மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு.5,500 கோடி ரூபாய் கூடுதல் சுமை ஏற்படும்.

பஞ்சாப் அரசு தனது கடனை அடைக்க, தனது வருமானத்தில் 45 விழுக்காட்டைச் செலவிட வேண்டியுள்ளது. இது தவிர, அரசு ஊழியர்களுக்கு, இந்த வருமானத்தில் இருந்து சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். வளர்ச்சிப் பணிகளுக்கு பணம் மிஞ்சுவதில்லை. எனவே அரசு கடன் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாநில அரசின் கடன்சுமை அதிகரித்து பொருளாதார நெருக்கடியும் அதிகரிக்கிறது.

பஞ்சாப் தவிர, ஆடுதாண்டும் காவிரியில் அணை கட்டியே தீருவது என்று கொக்கரித்துக் கொண்டிருக்கிற கர்நாடகா, கேரளா, ஜார்கண்ட், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் போன்ற 20க்கும் மேற்பட்ட மாநிலங்கள் அதிகரித்து வரும் கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மாநிலங்களின் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் மிகஅதிக மொத்த நிலுவை கடன்களை அதாவது 56.6 விழுக்காடு கடனை கொண்டுள்ளது என்று இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பஞ்சாப் 53.3 விழுக்காட்டுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு மேலும் உதவ வேண்டும். மாநில அரசுகளின் வருவாயை வலுப்படுத்த ஒன்றிய அரசின் பொருளாதாரம் சார்ந்த அமைப்புகள் நிதி பரவலாக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று சாய் பரத்கர் கூறுகிறார்.

ஒன்றிய அரசின் பொருளாதார நிலை மற்றும் அதன் கொள்கைகள் மீது மக்கள் அதிக கவனம் செலுத்தும் வகைக்கு கடும் நெருக்குதல் இருக்கிறது. ஆனால் மாநில அரசுகள் நேரடியாக மக்களுக்கு நெருக்குதல் தர வாய்ப்பில்லாமல், மாநில அரசுகளின் பொருளாதாரக் கொள்கைகளை மக்கள் கண்டுகொள்ளாமல் விடுகிறார்கள் என்று பல பொருளாதார நிபுணர்கள் வாதிடுகின்றனர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,226.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.