Show all

பீகார் மாநிலத்திற்கு ஒரு புதியகட்சி! மக்களிடம் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்கிறார் பிரசாந்த் கிசோர்.

பிரசாந்த் கிசோர் தனது தனிப்பட்ட அரசியல் பயணத்தை அறிவிக்க இருக்கிறார் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அவரின் கீச்சுப்பதிவு அந்தத் தகவலை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. 

19,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: பாஜகவை இந்தியாவில் வளர்த்துவிட்டதில் பெரும்பங்கு பெற்றவரும், காங்கிரஸ் கட்சியும் ஆலோசனை கேட்கப்பட்டவரும், ஒய்எஸ்ஆர் காங்கிரசின் வளர்ச்சியில் கொஞ்சம் பங்கு பெற்றிருந்தவரும், வெல்லப் போகிற திமுகவுக்கு ஆலோசனை கூறும்; தளத்தில் அமைந்து ஆதாயம் ஈட்டியவரும் ஆன இந்தியாவின் ஒரு நிழல் பேரறிமுகந்தான் பிரசாந்த் கிசோர்.

பிரசாந்த் கிசோர் அண்மையில் காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாக தகவல்கள் வெளியானது. அதை அவர் மறுத்துவிட்டர். மேலும் தன்னைவிட காங்கிரஸ் கட்சிக்கு இப்போது தலைமை தான் முதன்மை என்று அவர் தெரிவித்தார். 

இதையடுத்து பிரசாந்த் கிசோர் தனது தனிப்பட்ட அரசியல் பயணத்தை அறிவிக்க இருக்கிறார் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.


இந்த நிலையில் பிரசாந்த் கிசோர் தனது கீச்சுப் பதிவில் சிக்கல்களை நன்றாக புரிந்து கொள்ள உண்மையான தலைமையான மக்களிடம் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்க உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் அவரின் கட்சியை  தொடங்க வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,236. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.