Show all

வாடிக்கையாளர் வருத்தமூட்டலில் ஜியோவும்! ஏர்டெல் வோடா- ஐடியா விலையேற்றக் கூட்டணியில் இணைந்து

ஏர்டெல்லினை போல ஜியோவின் கட்டண அதிகரிப்பு இருக்காது. ஏனெனில், ஜியோ ஏற்கனவே நல்ல லாபத்தில் தான் உள்ளது. ஆக பெரியளவில் ஏற்றம் இருக்காது என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது 21விழுக்காடு வரையில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.  

13,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: வருத்தத்தில் வாடிக்கையாளர்களை ஆழ்த்தும் வகைக்கு, ஜியோவின் அதிரடி முடிவு. 

ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் சில நாட்களுக்கு முன்பு, செல்பேசிக் கட்டணத்தை உயர்த்திய நிலையில், இன்று ஜியோ நிறுவனமும செல்பேசிக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. 

ஏர்டெல் நிறுவனம் தனது கட்டண உயர்வை கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைப்படுத்திய நிலையில், வோடபோன் நிறுவனமும் அதனைத் தொடர்ந்து நடைமுறைப் படுத்தியது.

இதனை தொடர்ந்து ஜியோ நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தலாம் என்றாலும், கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. 

அனால் மக்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக தற்போது ஜியோவும் தனது கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியான ஜியோவின் கட்டண அறிவிப்பு அறிக்கையில், ஜியோவின் கட்டண உயர்வானது எதிர்வரும் புதியம் கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோது, ஏர்டெல்லினை போல ஜியோவின் கட்டண அதிகரிப்பு இருக்காது. ஏனெனில், ஜியோ ஏற்கனவே லாபத்தில் தான் உள்ளது. ஆக பெரியளவில் ஏற்றம் இருக்காது என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது 21விழுக்காடு வரையில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.  
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,082.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.