Show all

வாழவைத்த கிராமப்புற மக்களை வஞ்சித்ததா ஜியோ- வஞ்சம் தீர்த்தனரா கிராமப்புற மக்கள்!

யாரும் எதிர்பார்க்காத வகையில், கடந்த மாதத்திற்கு முந்தைய மாதம் ஜியோ நிறுவனம் கிட்டதட்ட 2 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. 

08,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஒரே மாதத்தில் 2 கோடி வாடிக்கையாளர்களை இழந்திருக்கிறதாம் ஜியோ. 

இந்திய தொலைத்தொடர்புச் சந்தையில் கடந்த மாதத்திற்கு முந்தைய மாதம் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து வளர்முகத்தில், வாடிக்கையாளர்களைப் பெற்று வந்த ரிலையன்ஸ் ஜியோ பெருமளவிலான ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கியது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், கடந்த மாதத்திற்கு முந்தைய மாதம் ஜியோ நிறுவனம் கிட்டதட்ட 2 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. 

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தனது டெலிகாம் சேவை கட்டணத்தை  25 விழுக்காடு வரையில் உயர்த்த முடிவு செய்துள்ளன. இதற்கான காரணமாக- தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய பேரளவு உரிமத்தொகையின் நிலுவைத் தொகையைச் செலுத்த 4 ஆண்டு காலக்கெடு பெற்றுள்ள நிலையில், அந்த பேரிழப்பை ஈடுசெய்ய இந்தக் கட்டண உயர்வு என்கின்றன.

இந்தச் சூழ்நிலையில் கடந்த மாதத்திற்கு முந்தைய மாதத் தரவுகள் ஜியோவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ கடந்த மாதத்திற்கு முந்தைய மாதம் மட்டும் சுமார் 19 மில்லியன் அதாவது 1.9 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதன் மூலம் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 424.83 மில்லியனாகக் குறைந்துள்ளது. 

இதேவேளையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் 2.7 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைத் தனது இணைப்பின் கீழ் பெற்றுள்ளது. இதன் மூலம் ஏர்டெல்லின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 354.46 மில்லியன் ஆக உள்ளது. 

வோடபோன் ஐடியா 10.7 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து 269.99 மில்லியன் வாடிக்கையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது.   

அண்மையில் ரிலையன்ஸ் ஜியோ தனது குறைவான விலை கொண்ட சேவை திட்டங்கள் பலவற்றை நீக்கியது. இதனாலேயே கடந்த மாதத்திற்கு முந்தைய மாதத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்தது என்று தெரியவருகிறது. 

கடந்த மாதத்திற்கு முந்தைய மாதத்தில் ஜியோ நகரத்து வாடிக்கையாளர்களை விடவும் கிராமம் மற்றும் நகர் சார்ந்த பகுதி வாடிக்கையாளர்களையே அதிகளவில் இழந்துள்ளது. 

ஜியோவின் இன்று வரையிலான பேரளவு வளர்ச்சிக்குக் காரணம் கிராமப்புற மக்களே என்று தரவுகள் தெரிவிக்கும் வகையில்- வாழவைத்த கிராமப்புற மக்களை வஞ்சித்த ஜியோவை வஞ்சம் தீர்த்தனர் கிராமப்புற மக்கள் என்று ஜியோவின் விதி எழுதப்பட்டிருக்கிறது கடந்த மாதத்திற்கு முந்தைய மாத ஜியோவின் வாடிக்கையாளர் இழப்பிற்கு.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,077.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.