Show all

நீர்த் தேக்கங்களுக்கு எதிரான எரிச்சல்!

நீர்த்தேக்கங்களுக்கு எதிரான எரிச்சல் பலவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது என்பதை சில தொன்மங்கள் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

10,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: கைபர் போலன் கணவாய் வழியாக நாடோடிகளாக ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு, தமிழ்தொடர்ஆண்டு-1600 வாக்கில் (கிமு.1500- கிமு.500) வடபுலத் தமிழர் வாழ்ந்த வட நாவலந்தேயப் பகுதியை (உலகினர் 'ந்தேயா' என்று ஒலித்தனர்.) ஆரியர்கள் வந்தடைந்தனர்.

தமிழர்கள் அணைகளைக் கட்டி நீரைத் தேக்கி வேளாண் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அங்கு வாழ்ந்திருந்த தமிழர்களின் வாழ்க்கை முறைகளைத் தெரிந்து கொள்ளவோ கண்டு கொள்ளவோ முயலவேயில்லை. மாறாக தங்கள் எதிரிகளாகவே கருதினர் ஆரியர்கள். 

நடுஇரவில் கூட்டமாக வந்து தமிழர்களின் அணைக் கட்டுகளைத் தகர்த்தார்கள். நீர்த்தேக்கத்திற்கு எதிரான எரிச்சல் அப்போதே தொடங்கி விட்டது.

'இந்த அதேவர்கள் நீரை மாட்டைத் தொழுவத்தில் அடைப்பதைப் போல அடைத்து வைத்திருக்கிறார்களே' என்று ஆரியர்கள் தங்கள் ரிக் வேதத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

நீரை அதன் போக்கில் விட்டால் தானே ஆடுமாடுகளுக்கான புல் பூண்டுகள் வளரமுடியும் என்று கருதியே அணைகளைத் தகர்த்திருந்திருக்கிறார்கள்.

முல்லைப்பெரியாறு அணைப் பாதுகாப்பு என்கிற தலைப்பை முன்வைத்து சமூக வலைதளங்களின் மூலமாக கேரளாவில் பீதி கிளப்பப்படுகிறது.

தற்போது கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. கேரளாவின் கோட்டயம் உள்ளிட்ட தென் மத்திய மாவட்டங்களில் ஒரு கிழமைக்கு முன்பு கனமழை பெய்தது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 40-க்கு மேற்பட்டோர் பலியாகினர். அதேபோல, முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. அதனால், அணையின் நீர்மட்டம் உயர்ந்துவருகிறது. இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு கடந்த கிழமை ஒரு மடல் எழுதினார்.

அந்தக் மடலில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.85 அடியாக இருக்கிறது. மழை மேலும் தீவிரமடைந்தால், அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்துவிடும் என்று அஞ்சப்படுகிறது. எனவே, முல்லைப்பெரியாறு அணையிலிருந்து அதிகபட்ச தண்ணீரை கால்வாய் வழியாக வைகை அணைக்குத் திறந்துவிடுமாறு உடனடியாக அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்படித் திறந்துவிடும்போது, மதகுகளைத் திறப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பே அது குறித்து கேரள அரசுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதன் மூலம், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும்' என்று பினராயி விஜயன் கூறினார்.

இந்த நிலையில், நடிகர் பிருத்விராஜ் மூன்று நாட்களுக்கு முன்பு தனது கீச்சுப் பக்கத்தில், 'உண்மைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் எதுவாக இருந்தாலும் சரி, 125 ஆண்டுகள் பழைமையான இந்த அணை ஒரு செயல்பாட்டுக் கட்டமைப்பாக இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. அரசியலையும் பொருளாதாரத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு, எது சரியோ அதைச் செய்யவேண்டிய நேரம் இது' என்ற கருத்தைப் பதிவுசெய்தார்.

பிருத்விராஜின் அந்தப் பதிவைத் தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த பேரறிமுகங்கள் பலரும் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிரான கருத்துப்பரப்புதலில் இணைந்தனர். 

நடிகர் பிருத்விராஜ் கருத்துக்கு எதிராகத் தமிழ்நாட்டிலிருந்து சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த சிலர், தேனியில் பிருத்விராஜ் உருவபொம்மையை எரித்தனர்.

முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக கேரளாவில் மேற்கொள்ளப்படும் கருத்துப் பரப்புதலுக்கு எதிராக கேரள முதல்வரிடமிருந்தே கண்டனம் எழுந்தது. இந்தப்பாடு குறித்து சட்டமன்றத்தில் உறுப்பினர் எம்.எம்.மணி எழுப்பிய கேள்விக்கு பினராயி விஜயன் விரிவாக விளக்கம் அளித்தார். முல்லைப்பெரியாறு அணை குறித்து சமூக வலைதளங்கள் மூலமாக பீதியைக் கிளப்புவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.

தற்போது முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. அணை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அணை உடைந்தால் லட்சக்கணக்கானோர் உயிரிந்துவிடுவார்கள் என்றும் சமூக ஊடகங்களில் சிலர் கருத்துப்பரப்புதல் செய்கிறார்கள். அத்தகைய தவறான கருத்துப்பரப்புதலுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என்றார் பினராயி விஜயன்.

முல்லைப்பெரியாறு அணை 125 ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம். ஆனால், முல்லைப்பெரியாறு அணை உறுதியாக இருப்பது பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அந்த அணையின் கட்டமைப்பு வலுவாக இருப்பதாக வல்லுநர் குழுக்கள் ஆய்வுசெய்து அறிக்கைகள் சமர்ப்பித்துள்ளன. அப்படியிருக்கும்போது, எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் முல்லைப்பெரியாறு அணை குறித்துத் தொடர்ந்து வதந்தி பரப்பப்படுகிறது.

தெளிவாக விசாரணை மேற்கொண்டதில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கேரளாவைச் சேர்ந்த முதன்மையான பேரறிமுகர்கள் சொகுசு விடுதிகளையும் பங்களாக்களையும் கட்டிவைத்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் தங்கள் சுயநலத்துக்காக அணை குறித்து வதந்திகளை முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நீர் மட்டம் பரவும் அச்சம் ஏற்படும் போதெல்லாம், முல்லைப்பெரியாறு அணைக்கு எதிரான புரளியை மீண்டும் மீண்டும் கிளப்பி விடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர் என்று தெரிய வருகிறது. 

ஆறு. ஏரி, குளம், குட்டை என்று எல்ல நீர்பிடிப்பு பகுதிகளுக்கும் இதுபோன்ற ஆக்கிரமிப்பாளர்களால் தாம் சிக்கல் காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வர்தா புயலின் போது சென்னை ஏரிகள் ஆக்கிரமிப்பாளர்களால் கைப்பற்றி இருந்த நிலைபற்றியே மழையைச் சமாளிக்கும் வகைக்கு ஏரியில் இடம் போதமை காரணமாக ஊர்களுக்குள் நீர் புகுந்து சென்னையே ஒரு கிழமைக்கு மேலாக வெள்ளக்காடாக அமைந்திருந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளின் ஆக்கிரமிப்புகள் யாருடையாக இருந்தாலும் பாரபட்சம் காட்டாமல், 'மதிப்புக்கு மேலான இழப்பீடு கொடுத்தாவது' ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்துவதே நீர் ஆதாரங்களுக்கான நிலையான தீர்வாக அமைய முடியும்.

மேட்டூர் அணையில் தண்ணீர் நூறு அடியைக்கடக்கும் போதெல்லாம் அணைக்குள் முழுவடை என்று கொத்தாக மகசூல் அள்ளிய கொஞ்சமான வேளாண் பெருமக்கள்- பாழாய்ப்போன அணை நிரம்பி விட்டதே என்று புலம்புவார்கள். அவர்கள் எல்லாம் பிரித்தானிய ஆட்சிகாலத்திலேயே அணையில் மூழ்கிய தங்கள் நிலங்களுக்கு புதுச்சாம்பள்ளியில் நிலம் இழப்பீடு பெற்றவர்கள்தாம். அணை அமைந்த இடத்திற்கு பெயர் சாம்பள்ளி. அவர்கள் சொந்தமாகக் கூட முழுவடையில் உழவு செய்கிறவர்கள் அல்லர். அந்த நிலங்களை இரண்டாவது முறையாகவும் விற்க- வாங்கப் பெற்ற சில அப்பாவி வேளாண் பெருமக்கள்தாம் இந்த புலம்பலுக்குச் சொந்தக்காரர்கள். இவர்களுக்கும் கூட 'மதிப்புக்கு மேலான இழப்பீடு கொடுத்தாவது' ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்துவதே மேட்டூர் அணையில் ஒவ்வொரு ஆண்டும் வருத்தப்பதிவு இல்லாமல் நீர் நிரம்புவதற்கு வாய்ப்பாக அமைய முடியும்.

இப்படி ஒவ்வொரு அணைகளிலுமே வருத்தப்பதிவுகள் தொடர்ந்துவருவதை உரிய அதிகாரிகளும், அரசும் பாதிப்பில்லாமல் களைய முற்படுவது, இந்தியா முழுவதும் நீர் ஆதாரங்களுக்கான நிலையான தீர்வாக அமைய முடியும்.
 -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,049.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.