Show all

கண்டுகொள்ளப்படாத நமது எதிர்பார்ப்பு! புரிகிறதா ஒன்றிய அமைச்சர் அசுவனிவைபவ்வின் நோக்கம்

அந்தந்த மாநிலத்தில் இயங்கும் தொடர்வண்டித் துறையில், அந்தந்த மாநில மக்களை மட்டும் பணியில் அமர்த்துங்கள் என்கிற நமது வேண்டுகோளை ஒன்றிய அமைச்சர் அசுவினி, தங்கள் நோக்கத்திற்குப் புரிந்து கொண்டுள்ளார். 07,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டி நிலையங்களில் பணியாற்றும் தமிழ்தெரியாத அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தமிழ் மொழியைக் கற்க வேண்டும். தமிழ் மொழி தெரியாமல் இருப்பதால், தொடர்வண்டியில் பயணிக்கும் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டித்துறை ஊழியர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என தொடர்வண்டித்துறை அமைச்சர் அசுவினிவைபவ் தெரிவித்துள்ளார். எந்தப் பாணி பூரி விற்பவனும் எத்தனையோ ஆண்டுகள் தமிழ்நாட்டில் இருந்தாலும் தமிழ் பேசுவதில்லையே. துகில், மின்னியல், வண்பொருள், அடகுக்கடை, இப்படி நிறைய துறைக்கடைகளை வாடகையில் தொடங்கி மாளிகை கட்டிக் கொள்கிற எந்த மார்வாரி பணியாவும் தமிழ் பேசுவதில்லையே. ஓ! இந்த நம்பிக்கையில்தான்- தொடர்வண்டித்துறை ஊழியர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என தொடர்வண்டித்துறை அமைச்சர் அசுவினிவைபவ் தெரிவித்துள்ளாரா? -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,255.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.