Show all

தலைமைஅமைச்சர் மோடியின் கீச்சுக் கணக்கில் ஊடுருவிய குறும்பர்கள்!

தலைமைஅமைச்சர் மோடியின் கீச்சுக்கணக்கில் ஊடுருவி பிட்காசு குறித்து பதிவிட்டிருந்தனர் குறும்பர்கள். கண்டறிந்து உடனடியாகத் தீர்வு காணப்பட்டது.

27,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட கீச்சுக் கணக்கை ஊடுருவிய (ஹேக்), குறும்பர்கள் (ஹேக்கர்) 'இந்தியா அதிகாரப்பாடாக பிட்காசுவை சட்டப்பாட்டு நாணயமாக ஏற்றுக்கொண்டது' என்ற பதிவை வெளியிட்டனர். இதனால் பலரும் குழப்பம் அடைந்தனர்.

தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியின் கீச்சுக் கணக்கில் ஊடுருவி வெளியிடப்பட்ட பிட்காசு குறித்த பதிவும் நீக்கப்பட்டு, தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியின் கீச்சுக் கணக்கும் உடனடியாக மீட்கப்பட்டது.

தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி முகநூல், கீச்சு போன்ற சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக  இயங்குபவர், அரசின் அதிரடிகள், அரசு தொடர்பான விவரங்களை தொடர்ச்சியாக தனது சமூக ஊடக பக்கத்தில் அவர்வெளியிட்டு வருகிறார். தலைமைஅமைச்சர் நரேந்திர மோடிக்கு அரசு சார்ந்து ஒரு கீச்சுக் கணக்கும், தனிப்பட்ட முறையில் ஒரு கீச்சுக்கணக்கும் என இரண்டு கணக்குகள் உள்ளன.

அரசு சார்ந்த கீச்சுக்கணக்கை 45.4 மில்லியர் பேர்களும் தனிப்பட்ட கணக்கை 73.4 மில்லியன் பேர்களும் பின்பற்றுகின்றனர். இந்நிலையில், தலைமைஅமைச்சர் மோடியின் தனிப்பட்ட கணக்கை சிலர் ஊடுருவியுள்ளனர்.

மேலும் அதில், 'இந்தியா அதிகாரப்பாடாகப் பிட்காசுவை சட்டப்பாட்டு நாணயமாக ஏற்றுக்கொண்டது. அரசாங்கம் அதிகாரப்பாடாக 500 பிட்காசு வாங்கி நாட்டின் அனைத்து மக்களுக்கும் வழங்கி வருகிறது' என்று பதிவிட்டு மோசடி இணைப்பு ஒன்றையும் குறிப்பிட்டிருந்தனர். இதனால் பலரும் குழப்பம் அடைந்தனர். தலைமைஅமைச்சர் மோடியின் தனிப்பட்ட கணக்கு ஊடுருவப்பட்டது பின்னரே தெரியவந்தது.

உடனடியாக- ஊடுருவிய கணக்கு மீட்கப்பட்டு, அதில் வெளியிடப்பட்டிருந்த பதிவும் நீக்கப்பட்டது. இது தொடர்பாக தலைமைஅமைச்சரின் அதிகாரப்பாட்டு பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில்,  தலைமைஅமைச்சர் மோடியின் கீச்சுக் கணக்கு சிறிது நேரம் ஊடுருவப்பட்டிருந்தது. கீச்சு நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு உடனடியாக கணக்கு மீட்கப்பட்டது.  இடைப்பட்ட நேரத்தில் அந்த கணக்கில் வெளியிடப்பட்டிருத்த பதிவுகளை கவனத்தில் கொள்ள வேண்டாம்' என்று தெரிவிக்கப்பட்டது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,096.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.