Show all

இன்றைய நிலவரம்! பெட்ரோல், டீசல் வணிகத்தில் ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் வரி ஆதாயங்கள்

இன்று பெட்ரோல்-டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 

18,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவளி விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து கொள்ள உரிமை வழங்கியிருக்கிறது ஒன்றிய அரசு.

இன்று பெட்ரோல்-டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 

இந்த விலையில் 48 விழுக்காடு பெட்ரோல் டீசலின் அடக்க விலையாகும். இதில் 28 விழுக்காடு ஒன்றிய அரசு வரி ஆதாயம் பெறுகிறது. விற்பனையாளருக்கான தரகுத் தொகையாக 4 விழுக்காடு ஆகும். தமிழ்நாடு அரசின் வரி ஆதாயம் 20 விழுக்காடு ஆகும். விற்பனையாளருக்கான தரகு 4 விழுக்காடு என்றால் மாநில அரசின் வரி 2 விழுக்காடாகக் அமைத்துக் கொள்வதும், ஒன்றிய அரசின் வரி 1 விழுக்காடாக அமைத்துக் கொள்வதும் முறையாகும். 

மேல்மட்டத்திற்கு செல்ல செல்ல ஒட்டுமொத்த ஆதாயம் தருவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதால் ஆதாயத்தின் அளவை குறைத்துக் கொண்டே போவது வணிக அறமாகும். உண்மையில்- பெட்ரோல் உற்பத்தி செய்து, நமக்கு விற்கும் நாட்டை விட அதை சந்தைப்படுத்துவதில் அதிக ஆதாயம் பார்க்கிறது இந்தியா. 

ஆளும் அரசுகள் நினைத்தால் பெட்ரோல் டீசல் விலையை சரிபாதியாகக் குறைத்து இந்தியாவின் ரூபாய் மதிப்பை அமெரிக்க டாலருக்கு இணையாக மாற்றி அமைக்க முடியும். இந்திய விடுதலையின் போது இந்திய ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு இணையாகவே இருந்தது என்பது நினைவுகூரத் தக்கது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,266.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.