Show all

உத்தரப்பிரதேச அமைச்சரின் அசத்தல் ஆய்வு! ஒப்பீட்டு அளவில் பெட்ரோல் டீசல் விலை குறைவாகவே உள்ளது


உத்தர பிரதேச பாஜக அமைச்சர் உபேந்திர திவாரி உளறிக் கொட்டியது இன்றைய தலைப்பு ஆகிவருகிறது. இந்தியாவில் 95 விழுக்காடு மக்களுக்கு பெட்ரோல் டீசல் தேவையில்லை என்பதாக.

05,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவில் 95 விழுக்காடு மக்களுக்கு பெட்ரோல் டீசல் தேவையில்லை என்று, தன்கனவில் இந்தியா சுற்றி வந்து முன்னெடுத்த கணக்கெடுப்பை உத்தர பிரதேச பாஜக அமைச்சர் உபேந்திர திவாரி உளறிக் கொட்டியது இன்றைய தலைப்பு ஆகிவருகிறது.

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உத்தர பிரதேச அரசில் அமைச்சராகச் செயல்பட்டு வரும் உபேந்திர திவாரி, நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் கல்லெண்ணெய் விலை உயர்வு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு விடையளித்த உபேந்திர திவாரி, இந்தியாவில் ஒரு சிலரே 4 சக்கர வாகனம் பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் டீசல் தேவைப்படுகிறது. நாட்டில் 95 விழுக்காடு மக்களுக்கு பெட்ரோல் டீசல் தேவையில்லை.

பெட்ரோல் டீசல் விலையை தனிநபர் வருமானத்துடன் ஒப்பிட்டால் கல்லெண்ணெய் விலை தற்போது மிகக் குறைவாக உள்ளது என உளறி அசத்தல் காட்டியுள்ளார். 

உத்தரப்பிரதேசத்தில் 95 விழுக்காட்டு மக்கள் பெட்ரோல் டீசல் தேவையே இல்லாமல் இருக்கின்றார்களா? என்று கேள்வியும் கேட்டு, அவர்கள்தான் அடுத்த மாநிலங்களுக்கு பானிபூரி விற்கவும், கட்டுமானப் பணிகளில் ஒப்பந்த கூலியாகவும் சென்று விடுகின்றார்களே! ஆம் அவர்களுக்கு படிப்பு எதற்கு, கல்வி நிறுவனங்கள் எதற்கு? சொந்த வீடுகள் எதற்கு? போகும் மாநிலங்களில் எல்லாம் குடும்ப அட்டைக்கு பொருள் வாங்கிக் கொள்ளும் வகைக்கு அவர்களின் ஒன்றிய ஆட்சித் தலைவர் மோடி வகைசெய்திருக்கிறாரே! என்று விடையும் அளித்த நையாண்டிகள் இணையத்தை தீயாக்கி வருகின்றன.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,044.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.