Show all

32 ஆண்டுகள் காத்திருந்த தாயார் அற்புதம்மாள்! பேரறிவாளன் நிரந்தரமாக விடுதலை ஆவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது

32 ஆண்டுகளாக மிக நீண்ட சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து உச்சஅறங்கூற்றுமன்றம் பிணை வழங்கி இருப்பது மகிழ்ச்சியைச் தருகிறது என்கிறார், 32 ஆண்டுகள் காத்திருந்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் 

26,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: பேரறிவாளன் நிரந்தரமாக விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று அவரது தாயார் அற்புதம்மாள் கூறினார்.

இராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்பட 7 தமிழர்களையும் விடுதலை செய்யக்கோரி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட தீர்மானத்தின் மீது ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை.

இந்த நிலையில் சிறைவிடுப்பில் வெளியே வந்த பேரறிவாளன் தனக்கு பிணை வழங்க கோரி உச்சஅறங்கூற்றுமன்றத்தில் மனு செய்தார். மனுவை விசாரித்த உச்சஅறங்கூற்றுமன்றம் அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது.

மகனின் விடுதலைக்காக தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்திவரும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியதாவது:
மிக நீண்ட சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து உச்சஅறங்கூற்றுமன்றம் பிணை வழங்கி இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. 32 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் அவனது பாதி வாழ்க்கை சிறையிலேயே முடிந்துவிட்டது. 
 
எனக்கு வாழ்க்கையில் எதுவும் தேவையில்லை. எனது மகன் விடுதலையாக வேண்டும். பேரறிவாளனுக்கு ஏற்கனவே சிறைவிடுப்பு வழங்கப்பட்டிருந்தாலும் இயல்பாக வெளியே செல்ல முடியாது. இந்தச் சிக்கலையும் அவனது உடல் நிலையையும் கருத்தில் கொண்டு பிணை கிடைத்து இருக்கிறது.

நியாயம் என்றாவது வென்றே தீரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. விரைவிலேயே என்மகன் நிரந்தரமாக விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கையும் இதன் மூலம் ஏற்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,183.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.