Show all

இராகுல் காந்தியின் ஹிந்து- ஹிந்துத்துவா விளக்கம்!

ஹிந்து, ஹிந்துத்துவவாதி என்ற சொற்களுக்கு இடையேயான போட்டியே நாட்டின் தற்போதைய அரசியல்.  இந்த இரண்டு சொற்களும் மாறுபட்ட பொருளைக் கொண்டவை.  நான் ஹிந்து, ஆனால் ஹிந்துத்துவவாதி கிடையாது என்று விளக்கம் அளித்துள்ளார் இராகுல்காந்தி.

26,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஆட்சியை கைப்பற்றுவது குறித்தே ஹிந்துத்துவவாதிகள் வாழ்நாள் முழுவதும் சிந்திப்பதாக இராகுல் காந்தி பேசியுள்ளார்.

இராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் பணவீக்கத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு இராகுல் காந்தி பேசியதாவது:-

ஹிந்து, ஹிந்துத்துவவாதி என்ற சொற்களுக்கு இடையேயான போட்டியே நாட்டின் தற்போதைய அரசியல்.  இந்த இரண்டு சொற்களும் மாறுபட்ட பொருளைக் கொண்டவை.  நான் ஹிந்து, ஆனால் ஹிந்துத்துவவாதி கிடையாது. அண்ணல் காந்தி ஹிந்து, ஆனால் கோட்சே ஹிந்துத்துவவாதி.  

இந்தியா ஹிந்து மக்கள் அதிகம் வாழும் நாடு. ஹிந்துத்துவவாதிகள் அதிகாரத்தையே விரும்புகின்ற வகையினர். கடந்த ஏழு ஆண்டுகளாக அவர்கள் ஆட்சியில் இருக்கின்றனர்.  ஆட்சியை கைப்பற்றுவது குறித்தே ஹிந்துத்துவவாதிகள் வாழ்நாள் முழுவதும் சிந்திக்கிறார்கள். அதிகாரத்தை தவிர அவர்கள் வேறு எதையும் விரும்புவதில்லை. அதை பெறுவதற்காக அவர்கள் எதையும் செய்வார்கள்.  

அனைத்து மதங்களையும் மதித்து, யாருக்கும் அச்சுறுத்தலாக இல்லாதவரே ஹிந்து. ஹிந்துத்துவவாதிகளை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு, ஹிந்துக்களை மீண்டும் கொண்டுவர வேண்டும். இவ்வாறு இராகுல் காந்தி பேசினார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,095.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.