Show all

இன்னுமா வேட்பாளர்களில் படிக்காதவர்கள்! இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்திற்கு நடக்கும் சட்டமன்றத் தேர்தலில்

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்களில் 239 வேட்பாளர்கள் தங்களது கல்வித்தகுதி 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை என தெரிவித்திருக்கிறார்கள். பதினைந்து பேர்கள் எழுத்தறிவே இல்லாதவர்களாம்.
 
24,தை,தமிழ்த்தொடராண்டு-5123: இந்திய ஒன்றியத்தில் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் வரும் வியாழக்கிழமை தொடங்கி ஏறத்தாழ ஒருமாதம், ஏழு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது. அங்கு முதல் கட்டமாக 58 தொகுதிகளில் தேர்தல், வரும் வியாழக்கிழமை நடக்கிறது. 

இந்தத் தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்கள் பற்றிய ஒரு பார்வையை அவர்களது வேட்புமனுக்களுடன் இணைந்த உறுதிமொழிப் பத்திரங்களின் அடிப்படையில் மக்களாட்சி சீர்திருத்தங்களுக்கான சங்கம் வழங்கி உள்ளது. அது வருமாறு:-

11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் போட்டியிடுகிற 615 வேட்பாளர்களின் உறுதிமொழிப் பத்திரங்கள் ஆராயப்பட்டன.

15 வேட்பாளர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். 38 வேட்பாளர்கள் எழுத்தறிவு உள்ளவர்கள். 10 பேர் ஐந்தாம் வகுப்பு தேறியவர்கள். 62 பேர் எட்டாம் வகுப்பு தேறியவர்கள். 65 பேர் பத்தாம் வகுப்பு தேறியவர்கள். 102 பேர் பனிரெண்டாம் வகுப்பு தேறியவர்கள்.

பட்டதாரிகள் 100 பேர், 78 பேர் தொழில்கல்வி படித்தவர்கள், 108 பேர் முதுநிலை பட்டம் பெற்றவர்கள், 18 பேர் முனைவர் (ஆராய்ச்சி மருத்துவர்) பட்டம் பெற்றவர்கள், 7 பேர் பட்டயக்கல்வி படித்தவர்கள், 12 பேர் தங்கள் கல்வித்தகவல்களை வழங்கவில்லை.

239 வேட்பாளர்கள் தங்களது கல்வித்தகுதி 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை என தெரிவித்திருக்கிறார்கள். 304 பேர் பட்டதாரிகள் அல்லது அதற்கு மேல் கல்வித்தகுதி பெற்றவர்கள் என கூறி உள்ளனர்.

214 பேர் தங்கள் அகவை 25 முதல் 40 வரையில் எனவும், 328 பேர் 41 முதல் 60 அகவை வரையில் எனவும் தெரிவித்துள்ளனர். 73 பேர் தங்கள் அகவை 61 முதல் 80 வரையில் என கூறி உள்ளனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,151.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.