Show all

தமிழ்நாடு போல, கர்நாடகாவிலும் மோடி எதிர்ப்பலைக்கு காய்நகர்த்துகிறாரா எடியூரப்பா!

தமிழ்நாட்டு பாஜகவினர்களுக்கு ஆளுநர் பதவி, சட்டமன்ற உறுப்பினராகவே இல்லாத எல் முருகனுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி என்றெல்லாம் ஒன்றிய பாஜக காற்று, தமிழ்நாட்டுப்பக்கம் வீசுவதாக கருநாடகாவில் ஒரு கருத்துப் பரப்புதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

04,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாடு போல தாய்மொழி (கன்னடம்), மாநில அடையாளங்களைக் கொண்டாடுதல் போற்றவற்றில் அண்மைக்காலமாக எழுச்சி பெற்றுவரும் மாநிலம்தான் கருநாடகம். ஆனால் தமிழ்நாட்டின் விரும்பத் தகாத கட்சியாக இருக்கிற மற்றும் மாநிலத்துவத்திற்கு எதிரான கட்சியும் ஆன பாஜக அங்கு ஆட்சியில் இருப்பது வியப்பான செய்தியே ஆகும்.

ஒன்றிய ஆட்சியில் இருக்கும் பாஜகவை அவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு ஒரே காரணம், பாஜக எப்போதும், காவிரி ஆற்றுக் கொள்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்து. கருநாடகத்திற்கு ஆதரவு நிலைபேணும் ஒரே காரணம் பற்றியதாகும். 

ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவில் பாஜகவுக்கு அறைகூவலாக இருந்து வருகிற தமிழ்நாட்டை, பாஜகவின் அடாவடிகளுக்கு எதிர்நிலைப்பாட்டுக் கட்சியான திமுகவும் ஆட்சிக்கு வந்து விட்ட தமிழ்நாட்டை, தொடர்ந்து பகைத்துக் கொள்ள ஒன்றிய பாஜக விரும்பவில்லை. அதனால் ஆடுதாண்டும் காவிரியில் அணை கட்டுவோம் என்கிற மாநில பாஜகவினருக்கு ஆதரவாக ஒன்றிய பாஜக எந்த தில்லாலங்கடியையும் முன்னெடுக்கவில்லை. 

மாறாக தமிழ்நாட்டு பாஜகவினர்களுக்கு ஆளுநர் பதவி, சட்டமன்ற உறுப்பினராகவே இல்லாத எல் முருகனுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி என்றெல்லாம் ஒன்றிய பாஜக காற்று தமிழ்நாட்டுப்பக்கம் வீசுவதாக கருநாடகாவில் ஒரு கருத்துப் பரப்புதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் கருநாடகாவில், மோடி அலை மட்டுமே தேர்தலில் வெற்றி பெற உதவாது என்று எடியூரப்பா பேசி வருகிறார்.

கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் பாஜகவின் முன்னாள் முதல் அமைச்சராக இருந்தவர் எடியூரப்பா. இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது பதவியில் இருந்து விலகிக் கொண்டார் எடியூரப்பா. இதனைத் தொடர்ந்து பசவராஜ் பொம்மை புதிய முதல் அமைச்சராகப் பொறுப்பேற்று பதவியில் இருந்து வருகின்றார்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு எடியூரப்பா கூறும்போது, கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், மோடி அலை மட்டுமே அதிக தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றி பெற உதவாது. கூட்டு முயற்சியுடன் தேர்தலில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் என்று பேசி கருநாடகாவில் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.

கர்நாடக தேர்தலில் 140 தொகுதிகளுக்கும் கூடுதலாக கைப்பற்ற, மாநில மற்றும் ஒன்றியத் தலைவர்கள் கூட்டாக வாக்குகளை கைப்பற்ற முயற்சிக்க வேண்டும். மிகச் சிறப்பாக இந்த தேர்தலில் உள்ளூர் தலைவர்களின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,012.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.