Show all

தெரிவிக்கிறது சப்பானின் சுசுகி நிறுவனம்! இனி வாங்கலாமாம் குறைந்த விலை மின்சாரக் கார்களை இந்தியாவில்

அனைவரும் வாங்கும் விலையில் மின்சார கார்களை இந்தியாவில் தயாரிக்க ரூ.9800 கோடி முதலீடு செய்கிறது சப்பானின் சுசுகி நிறுவனம்.

06,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: மின்சாரக் கார்களைப் பொறுத்த வரை இந்தியாவில் இதுவரை வெளிவந்த கார்கள் அனைத்தும் ஆடம்பர வகையினவாகவே உள்ளன. இந்த நிலையில், குறைந்த விலையில் கார்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை மக்களை மின்சார வண்டிகளை நோக்கி தள்ளியுள்ளது. இந்தியாவிலும் பலர் மின்சார இருசக்கர வண்டிகள், கார்களை நோக்கி செல்கின்றனர். இதனால் வண்டிஉற்;பத்தி நிறுவனங்கள் பலவும் மின்சார வண்டிகள் உற்பத்தியில் இறங்கியுள்ளன.

இந்நிலையில் ஜப்பானின் முன்னணி நிறுவனமான சுசுகி மோட்டார் நிறுவனம், இந்தியாவில் ரூ.9800 கோடி முதலீட்டை மின்சார வண்டிகள் உற்பத்திகாக செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. மாருதி சுசுகி தொழிற்சாலைகளில் மின்சார வண்டிகள் மற்றும் மின்கலன்களை அந்நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இதுகுறித்து சுசுகி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் அதிக அளவில் மின்சார இருசக்கர, மூன்று சக்கர வண்டிகளின் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்திய நாட்டினர் பலரும் மின்சார வண்டிகளை நோக்கி திரும்பியுள்ளனர். மின்சார கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டாலும் பலவும் அதிக விலை உள்ள ஆடம்பர வகையினவாகவே இருக்கின்றன. இதன்விலையே ரூ.1 கோடியில் இருந்து தான் தொடங்குகிறது. 

ஒன்றிரண்டு நிறுவனங்கள் மட்டும் தாம் மக்கள் வாங்கக்கூடிய விலையில் மின்சார கார்களை உருவாக்கி வருக்கின்றன. இந்நிலையில் மாருதி சுசுகி அந்த இடத்தை நிரப்புவதற்கு திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வாங்கும் விலையில் கார்களை நிர்ணயித்தால் மட்டுமே இந்தியாவில் வரவேற்பு கிட்டும். அந்த வேலையில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.

தற்போது மாருதி சுசுகியின் வேகன் - ஆர் மாதிரியை மின்சார காராக அறிமுகம் செய்ய சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் மற்ற மாதிரிகளும் மின்சார வகைமைக்கு மாற்றப்படும். இவ்வாறு மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,193. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.