Show all

தொடர்ந்து சரிகிறது இந்திய ரூபாய் மதிப்பு! இந்தியா அதிக அளவு இறக்குமதியினை செய்யும் நாடாக இருப்பதால்

தொடர்ந்து 4வது நாளாக டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவினைக் கண்டுள்ளது. தற்போது டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 76 ரூபாய்க்கு அருகில் வீழ்ச்சி கண்டு காணப்படுகின்றது.

24,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: உக்ரைன் உருசியா இடையேயான பதட்டமானது உலக நாடுகளில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக பணவீக்கத்தினை தூண்டி வருகின்றது.

இதனால் உலக நாடுகளின் பொருளாதாரம் மோசமான வீழ்ச்சியினை காணலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலையும் 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது.

பன்னாட்டு அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் முன்னணி நாடாக இருக்கும் இந்தியா, பெரிதும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இது ஒரு காரணம் எனில் மறுபுறம் அமெரிக்கா கனடா, ஐரோப்பிய நாடுகள் உருசிய எண்ணெக்கு தடை செய்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது.

ஆனால் தேவை அதிகம் உள்ள இந்த நேரத்தில் உற்பத்தியானது குறைவாகவே இருந்து வருகின்றது. இதனால் விலை தொடர்ந்து அதிகரிக்கும் அச்சம் எழுந்துள்ளது. இதற்கிடையில் தொடர்ந்து 4வது நாளாக டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவினைக் கண்டுள்ளது. தற்போது டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 76 ரூபாய்க்கு அருகில் வீழ்ச்சி கண்டு காணப்படுகின்றது.

பல நாடுகளும் உருசியாவில் இருந்து இறக்குமதியினை தடை செய்து வருகின்றன. இது எண்ணெய் விலையை இன்னும் தூண்டும் விதமாக அமையலாம். இது ஓபெக் உற்பத்தியினை அதிகரித்தால் மட்டுமே விலையை கட்டுக்குள் வைக்க முடியும் என்ற நிலை இருந்து வருகின்றது. இந்தியா அதிகளவு இறக்குமதியினை செய்யும் நாடாக இருப்பதால், அதிக அன்னிய செலவாணி ஏற்படலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. இதன் காரணமாக ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவும் சரிவினைக் கண்டு வருகின்றது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,181.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.