Show all

கெஜ்ரிவால் வாழ்க வாழ்கவே! கெஜ்ரிவால் அரசு, ஸ்டாலினை வரவேற்று, தமிழில் பதாகை அமைத்து அசத்தல்

தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி அரசு பள்ளிகளை பார்வையிடவுள்ள நிலையில் அவரை வரவேற்று டெல்லியில் உள்ள கெஜ்ரிவால் அரசு சார்பாக தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று தமிழில் பதாகை வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பதாகையை பார்த்த திமுகவினர் வியப்பு அடைந்து வருகின்றனர்.
 
18,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: டெல்லி சென்றுள்ள தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளைப் பார்வையிட உள்ளார், இதற்காக தமிழ்நாட்டு முதலமைச்சரை தமிழில் வரவேற்ற பதாகையை அமைத்துள்ளது  டெல்லி அரசு. இதனை பார்த்த திமுகவினர் குதுகலம் அடைந்துள்ளனர். கெஜ்ரிவால் பண்பாட்டு முயற்சி வாழ்க வாழ்கவே!

டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள திமுக அலுவலகமான கலைஞர் அண்ணா அறிவாலயம் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் 4 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். 

நேற்று நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்சா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு அரசின் கோரிக்கை தொடர்பான மனுக்களை தலைமை அமைச்சர் மோடியிடம் வழங்கினார். இதனையடுத்து இன்று காலை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை ஸ்டாலின் சந்தித்து பேசினார். தொடர்ந்து பியூஸ்கோயல் உள்ளிட்ட அமைச்சர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை, சந்தித்துப் பேசவுள்ளார், அப்போது டெல்லி மேற்கு வினோத் நகரில் உள்ள அரசு பள்ளியை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிடுகிறார். அந்த பள்ளியில் நவீன வசதியுடன் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

தரமான கல்வி, நலங்கு வசதி என அனைத்திலும் டெல்லி அரசு பள்ளி சிறந்து விளங்குகிறது. இதனை தொடர்ந்து ஆம் ஆத்மி மோஹல்லா சிகிச்சையகத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு அங்கு செய்யப்பட்டுள்ள வசிதிகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி கேட்டறிகிறார்.

தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி அரசு பள்ளிகளை பார்வையிடவுள்ள நிலையில் அவரை வரவேற்று டெல்லியில் உள்ள கெஜ்ரிவால் அரசு சார்பாக தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று தமிழில் பதாகை வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பதாகையை பார்த்த திமுகவினர் வியப்பு அடைந்து வருகின்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,205. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.