Show all

ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்று பாரதி பாடியது இதற்கா? பெட்ரோல்விலை தாண்டியது நூறை. எரிவளிவிலை தாண்டியது ஆயிரத்தை

அடிப்படைத் தேவையாக இருக்கிற பெட்ரோல் எரிவளி விலைகள் கூட்டப்படும் போது அனைத்துப் பொருள்களின் விலையும் கூட்டப்பட்டு விடும். பெட்ரோல்விலை தாண்டியது நூறை. எரிவளிவிலை தாண்டியது ஆயிரத்தை.

24,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவளி விலை ரூ.50 உயர்ந்து ஆயிரத்தை தாண்டியது. பெட்ரோல் விலை 110ஐ தாண்டியுள்ளது. ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்று பாரதி பாடிய ஆனந்த கும்மிக்கு பொருள் தேடித் தந்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.

வணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் எரிவளியின் விலை கடந்த மாதம் ரூ.268.50 உயர்த்தப்பட்டுள்ளது. வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவளி விலை கடந்த மாதம் 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, 14 கிலோ உருளையில் கொடுக்கப்படும் வீட்டு எரிவளியின் விலை 965 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சமையல் எரிவளி விலை இன்று மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் ஒரு எரிவளி விலை ரூ.965 ஆக இருந்தது. இன்று மேலும் ரூ.50 உயர்த்தப்பட்டு இருப்பதால் ரூ.1,015 ஆக உயர்ந்துள்ளது. நாட்டின் அடிப்படைத் தேவையாக இருக்கிற இவைகளின் விலைகள் கூட்டப்படும் போது அனைத்துப் பொருள்களின் விலையும் கூட்டப்பட்டு விடும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,241.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.