Show all

ஒன்றிய அரசு என்பதே சரி! பாஜக பாராளுமன்ற உறுப்பினர் தலைமையிலான நடாளுமன்ற குழு திட்டவட்டம்

ஒன்றிய அரசின் பணியாளர், சட்டம் மற்றும் அறங்கூற்று, பொதுமக்கள் குறைகள் ஆகியவற்றுக்கான- பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுசில்குமார் மோடி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு, கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில், வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவுக்கான அரசை ஒன்றிய அரசு என்பதே சரி என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. 
 
14,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்திய அரசை நடுவண் அரசு என்று கூறுவதற்குப் பதிலாக ஒன்றிய அரசு என்று அழைக்க வேண்டும் என பாஜக பாராளுமன்ற உறுப்பினர் சுசில்குமார் மோடி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு வெளியிட்ட அறிக்கை, தெளிவு படுத்தியுள்ளது.

ஒன்றிய அரசின் பணியாளர், சட்டம் மற்றும் அறங்கூற்று, பொதுமக்கள் குறைகள் ஆகியவற்றுக்கான- பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுசில்குமார் மோடி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு, கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில், வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், நடுவண் அரசு என்ற சொல்லாடலை இந்திய ஒன்றியம் என மாற்ற வேண்டும். நிர்வாகம், சட்டமன்றம், அறங்கூற்றுத்துறை என அதிகாரத்தின் மூன்று பிரிவுகளும் இந்திய ஒன்றியத்தின் அங்கம் என அழைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. 

இந்த முன்னெடுப்பு அதிகார வரம்புக்கு உட்பட்டது எனவும், பரிந்துரை தெளிவாக இருப்பதாகக் குறிப்பிடும் நிலைக்குழு, அரசியமைப்புச் சட்டத்தை உருவாக்கும்போது நடுவண் அரசு, ஒன்றிய அரசு என எது பயன்படுத்தப்பட்டது எனக் கூறுமாறும் கேட்டுக் கொண்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 

தமிழ்நாட்டில், தமிழ் அறிஞர்கள் ஒன்றியம் என்ற சொல்லாடலையே நெடுங்காலமாக பயன்படுத்தி வந்த போதும், திமுக தற்போது ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே ஒன்றிய அரசு என்ற சொல்லாடலைப் பயன்படுத்தி வருகிறது. 

இதற்கு பாஜக தரப்பில் இருந்து எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர் கேள்வியெழுப்பியபோது, இந்திய அரசு என்பதை ஆங்கிலத்தில் யூனியன் கவர்ன்மெண்ட் என அழைப்பதால், நாங்கள் ஒன்றிய அரசு என்கிறோம். இது ஒன்றும் சமூக விரோத குற்றமல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். இந்நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழு அளித்துள்ள பரிந்துரையை தி.மு.க வரவேற்றுள்ளது.

மாநில அரசுகலைக்கும் அதிகாரம் பற்றி நடுவண் அரசு என்று ஒன்றிய அரசு புரிந்து கொள்ளப்படுகிறது. உண்மையில்- நெருக்கடி நிலை வரும்போது ஒன்றிய அரசையும் கலைக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளது. என்பதைப் பொருத்திப் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும் என்று சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவர்களின் நோக்கமும் இரண்டு அரசுகள் என்பதாகத்தான் உள்ளது. அனால் ஒற்றை ஆட்சித் தன்மையோடு தங்களுக்குத்தான் அனைத்து அதிகாரங்களும் என்று பாஜகவினர் பேசியும் ஆட்சியில் செயல்பட்டும் வருகின்றனர். 

1935 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்திலோ, 1947 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வரையறைக் குழுவிலோ, 1950 ஆம் ஆண்டு வந்த அரசியலைமைப்புச் சட்டத்திலோ மத்திய அரசு எனப் பயன்படுத்தப்படவில்லை.

இதுகுறித்து இத்தனை நாளாக திமுக பேசாமல் இருந்ததற்குக் காரணம், வாஜ்பேயி ஆட்சிக்காலத்தில்கூட ஒற்றை ஆட்சித் தன்மையோடு அவர்கள் நடந்து கொள்ளவில்லை. ஆனால், எந்த மாநில அரசையும் கேட்காமல் பொதுப்பட்டியலில் உள்ள கல்வியில்கூட புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவை உருவாக்கிவிட்டு கருத்தைக் கேட்பது என மக்களாட்சிக்கு எதிராக பாஜக செயல்பாடுகள் உள்ளன. 

எந்த மாநில அரசுகளையும் கேட்காமல் தாங்கள் செய்ததே சரி எனப் பேசும்போது, ஒன்றிய அரசுதான் எனப் பேசி வருகிறோம். அதைத்தான் நிலைக்குழுவும் கூறியுள்ளது. அறங்டகூற்றுத்துறையிலும் யூனியன் ஆஃப் இந்தியா என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சட்டமும் அதைத்தான் சொல்கிறது. என்று தெளிவு படுத்துகின்றனர் திமுக தொடர்பில் உள்ள சட்ட வல்லுனர்களும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,201. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.