Show all

தமிழ்நாடு என்கிற அடிப்படைக்கு, முந்தையதை மாற்றிக் கொள்ளாமல் தொடரும் விடையங்கள் வரிசையில்!

இந்தியாவில் மொழி அடிப்படை மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு பல மாநிலங்கள் பல விடையங்களில் தங்கள் மாநிலத்தின் மொழி அடிப்படைக்கு, முந்தையதை மாற்றிக் கொள்ளத் தொடங்கிவிட்டன. ஆனால் தமிழ்நாடு இன்னும்- தமிழ்நாடு என்கிற அடிப்படைக்கு முந்தையதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற உணர்வே இல்லாமல் இருக்கிறது. அதை திருத்த வேண்டும் என்கிற வரிசையில் இது முதலாவது கட்டுரை.

07,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியாவில் மொழி அடிப்படை மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு நாம் முதலாவதாக தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்து கொண்டோம். மகிழ்ச்சி! 

மேலும் நமது கல்வித்திட்டத்தில் மூன்று மொழிகள் இல்லை இரண்டு மொழிகள்தாம் என்று ஹிந்தியைத் தூக்கி வீசிவிட்டது மகிழ்ந்து கொண்டாட வேண்டிய, இந்தியாவில் எந்த மாநிலமும் துணியாத தனித்துவமான வரலாற்றுச் சாதனையே.

ஆனால் பல மாநிலங்கள் பல விடையங்களில் தங்கள் மாநிலத்தின் மொழி அடிப்படைக்கு, முந்தையதை மாற்றிக் கொள்ளத் தொடங்கிவிட்டன. ஆனால் தமிழ்நாடு இன்னும்- தமிழ்நாடு என்கிற அடிப்படைக்கு முந்தையதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற உணர்வே இல்லாமல் இருக்கிறது. 

அந்த வரிசையில் கல்வித்திட்டத்தில் முதல் பாடத்தில் தமிழ் என்று பதிவிடாமல் மொழிப்பாடம் என்றும், இரண்டாவது பாடத்தில் மட்டும் ஆங்கிலம் என்றும் பதிவிட்டு, முதல் பாடத்தில் தமிழுக்குச் சிறப்புத் தகுதி தராமல் மொழிப்பாடம் என்று இந்தியாவின் எந்த மொழியும் என்பது போல மயக்கம் ஏற்படுத்துகிறது.

அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான இந்திய ஒன்றிய அரசு கல்வித் திட்டம் பின்பற்ற வேண்டிய இந்த நடைமுறையை தமிழ்நாடு இன்னும் தொடர்ந்து பின்பற்றிக் கொண்டிருப்பது வரலாற்றுப் பேரவலமாகும்.

மகாரஷ்டிர அரசு தன் கல்வித்திட்டத்தில், முதல் மொழி என்பதில் மராட்டி என்று குறிப்பிட்டு தங்கள் மாநில மொழிக்கு இருக்கிற சிறப்புத் தகுதியை நிலை நிறுத்திக் கொள்கிறது.

தற்போது தமிழ்நாட்டில்- தமிழ், தமிழ்மக்கள், சமூகநீதிக்கான சிறப்பான அரசு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த அரசு உடனடியாக தலையிட்டு தமிழ்நாட்டுக் கல்வித்திட்டத்தில் இந்த மாற்றத்தை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,286.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.