Show all

நீட்! மூன்று மாணவர்கள் 720க்கு 720 என முழு மதிப்பெண்? தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டு 'சிக்கிய15' மாணவர்களின் முடிவுகள் களைவு...

கடும் எதிர்ப்புகளுக்கு நடுவிலேயும், தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு கடுமையான சோதனை, வடஇந்தியாவில் நிறைய நிறைய முறைகேடுகள் என்று குற்றசாட்டுகள், ஆகிய அவலங்களோடு அரங்கேற்றப்பட்ட நீட்தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

16,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: கடும் எதிர்ப்புகளுக்கு நடுவிலேயும், தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு கடுமையான சோதனை, வடஇந்தியாவில் நிறைய நிறைய முறைகேடுகள் என்று அவலத்தோடு அரங்கேற்றப்பட்ட நீட்தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டு சிக்கிய15 மாணவர்களின் முடிவுகள் களைவு. சிக்காத பல மாணவர்களின் மதிப்பெண் என்னவாக இருக்கும் என்று நியாயமாக தேர்வு எழுதியவர்களின் ஆதங்கம்.

பொது மருத்துவம், பல்மருத்துவம் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கு பாரபட்சமாகவும் அடாவடியாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் நீட், நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. மூன்று மாணவர்கள் 720க்கு 720 என முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

பொது மருத்துவம், பல்மருத்துவம் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை, ஒன்றியத் தேர்வு முகமை அண்மைக் காலமாக நடத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு, இந்திய ஒன்றியம் முழுதும் 16 லட்சம் மாணவ - மாணவியர் இந்த தேர்வை எழுதினர். தமிழ்நாட்டில் இருந்து 1.10 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர்.

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான கேள்வி மற்றும் விடைத் தாள்கள் மாற்றி வழங்கப்பட்டது தொடர்பாக, மும்பை உயர் அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட இரண்டு மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தி முடிக்கும் வரை, நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கும்படி மனுவில் கோரப்பட்டது. இதை விசாரித்த உயர் அறங்கூற்றுமன்றம், அந்த இரண்டு மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டது.

இந்நிலையில், இரண்டு மாணவர்களுக்காக 16 லட்சம் மாணவர்களை முடிவுக்கு காத்திருக்க வைத்திருக்க வேண்டியதில்லை என உச்சஅறங்கூற்றுமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடும்படி அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து நீட் தேர்வு முடிவுகளை, ஒன்றியத் தேர்வு முகமை நேற்று வெளியிட்டது. மாணவர்களின் மின்அஞ்சல் முகவரிக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன.

ஒன்றியத் தேர்வு முகமையின் நெநவ.வெய.niஉ.in என்ற இணையதளத்திலும் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவின் ஐதராபாத்தைச் சேர்ந்த மிருணாள் குட்டேரி, டில்லியின் தன்மய் குப்தா, மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த கார்த்திகா ஜி.நாயர் ஆகியோர், 720க்கு 720 என முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டு சிக்கிய15 மாணவர்களின் முடிவுகள் களைவு. சிக்காத பல மாணவர்களின் மதிப்பெண் என்னவாக இருக்கும் என்று நியாயமாக தேர்வு எழுதியவர்களின் ஆதங்கம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,055.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.