Show all

சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ்! ஏர்இந்தியாவைத் தொடர்ந்து, ஒன்றிய பாஜக அரசு விற்று, இந்தியாவிற்கு இழப்பு ஏற்படுத்தும் நிறுவனம்

ஒன்றிய பாஜக அரசு ஏர் இந்தியா நிறுவனத்தைத் தொடர்ந்து தனது விற்பனைப் பட்டியலில் இருந்த அடுத்த நிறுவனத்தைத் தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது. அது சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம். 

14,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஒன்றிய பாஜக அரசு- ஏர் இந்தியா நிறுவனத்தைத் தொடர்ந்து, அடுத்த நிறுவனமாக, ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை செய்துள்ளது.   

சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைச் சுமார் 210 கோடி ரூபாய் தொகைக்கு நந்தால் பைனான்ஸ் அண்ட் லீசிங் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது. இந்தச் சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை ஒன்றிய பாஜக அரசு வழக்கம் போல் ஏலத்தின் வாயிலாகவே விற்பனை செய்துள்ளது.   

இந்த ஏலத்தில் நந்தால் பைனான்ஸ் அண்ட் லீசிங் நிறுவனம் வெற்றி பெற்றதன் வாயிலாக இயல்அறிவு மற்றும் தொழில் ஆராய்ச்சி துறை கீழ் இருக்கும் பொதுத்துறை நிறுவனமான சென்ட்ரல் எலக்ட்ரானிக்சின் 100 விழுக்காட்டுப் பங்குகளையும் ஒன்றிய பாஜக அரசு விற்பனை செய்துள்ளது. 

நந்தால் பைனான்ஸ் அண்ட் லீசிங் நிறுவனத்தின் ஏல விண்ணப்ப தேர்வை- சாலை போக்குவரத்து அமைச்சர் நித்தின் கட்கரி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இயல்அறிவு மற்றும் தொழில்நுட்ப அமைச்சரான ஜிதேந்திர சிங் ஆகியோர் இணைந்து ஒப்புதல் அளித்துள்ளனர். 

இந்தியாவில் மின்நேரியல் (எலக்ட்ரானிக்ஸ்) பொருட்கள் தயாரிப்பு வணிகம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றியுள்ளதன் மூலம் நந்தால் பைனான்ஸ் அண்ட் லீசிங் நிறுவனம் நேரடியாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியிலோ அல்லது கூட்டணி முறையிலோ உற்பத்தியைத் தொடங்கி பெரிய அளவில் வணிகத்தை விரிவாக்கம் செய்ய முடியும். தொழில் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்ய, இணைந்து ஒப்புதல் அளித்த சாலை போக்குவரத்து அமைச்சர் நித்தின் கட்கரி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இயல்அறிவு மற்றும் தொழில்நுட்ப அமைச்சரான ஜிதேந்திர சிங் ஆகியோருக்கு எந்தத் துணிச்சலில் இந்த நந்தால் பைனான்ஸ் அண்ட் லீசிங் நிறுவனம் வாங்குகிறதோ- அந்தத் துணிச்சல் நம்ம பாஜக அரசுக்கு ஏன் இல்லை என்கிற கேள்வி ஏன் எழவில்லை என்கிற கேள்வி எழுந்தால்- வடிவேல் நையாண்டி மாதிரி, இதற்கெல்லாம்  ஆளும் பாஜக சரிப்பட்டு வராது என்பதுதான் விடை. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,083.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.