Show all

ஒன்றிய அரசின் வரவுசெலவுத் திட்டம்! இன்று பதிகை செய்யப்பட்டு வருகிறது

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதமில்லா ஒன்றிய அரசின் வரவுசெலவுத் திட்டத்தைப் பதிகை செய்கிறார்.

19,தை,தமிழ்த்தொடராண்டு-5123: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவுசெலவுத் திட்ட விவரங்கள் அடங்கிய மாத்திரையுடன் (டெப்லெட்) குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்தை சந்தித்துவிட்டு பாராளுமன்றம் வந்தார்.

2022-23 நிதியாண்டுக்கான ஒன்றிய அரசின் வரவுசெலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் இன்று பதிகை செய்யப்பட்டு வருகிறது. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதமில்லா ஒன்றிய அரசின் வரவுசெலவுத் திட்டத்தைப் பதிகை செய்கிறார். இந்நிலையில் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சக அதிகாரிகளுடன் பாராளுமன்றம் வந்துள்ளார்.

உத்தரபிரதேசம் உள்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர்களை கவர கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இன்று பதிகை செய்யப்பட உள்ள வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

குறிப்பாக, வருமான வரி உச்சரவம்பு ரூ. 2.5 லட்சத்தில் இருந்து ரூ. 3 லட்சமாக அதிகரிக்கப்படுமா? வரி சலுகைகள் அறிவிக்கப்படுமா? என பல்வேறு எதிர்பார்ப்புகள் ஒன்றிய வரவுசெலவுத் திட்டம் குறித்து எழுந்துள்ளன. 

முன்னதாக, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன வரவுசெலவுத் திட்ட விவரங்கள் அடங்கிய மாத்திரையுடன் குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்தை சந்தித்தார். 

ஒன்றிய அரசின் வரவுசெலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் இன்று காலை 11 மணியிலிருந்து தொடர்ந்து பதிகை செய்யப்பட்டு வருகிறது. இது ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிகை செய்யும் 4-வது வரவுசெலவுத் திட்டம் ஆகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,146.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.