Show all

சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜியாங்க மாகாணத்தைச் சேர்ந்த முதியவர் தாவோ...

சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜியாங்க மாகாணத்தைச் சேர்ந்த முதியவர் தாவோ,

விவசாயியான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது விவசாய நிலங்களை 2 மகன்களுக்கும் பிரித்து கொடுத்தார்.

அதன்பின்னர் அக்கிராமத்தில் இருந்து வெளியேறி வாடகை வீட்டில் தங்கியிருந்தார். குப்பை பொறுக்கி பிழைத்து வந்தார். முதுமை வாட்டவே அவரால் தனித்து வாழ முடியவில்லை. எனவே மகன்களுடன் வாழ விரும்பினார். ஆனால் அவர்கள் அவரை ஏற்காமல் வெறுத்து ஒதுக்கி கைவிட்டனர்.

இதனால் மனம் உடைந்த முதியவர் தான் மரணம் அடைந்த பிறகு சேமித்து வைத்திருந்த ரூ21 லட்சத்தை மகன்களுக்கு கொடுக்கக் கூடாது. அதை தன் உடலுடன் வைத்து எரிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் அவர் இறந்து விட்டார். அவர் கடைசி ஆசைப்படி சேமித்து வைத்திருந்த ரூ. 21 லட்சத்துடன் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது.

அவர் இறந்து ஒரு மாதம் ஆகிறது. தற்போது தான் இத்தகவல் வெளியாகி உள்ளது. சுடுகாட்டில் பணிபுரியும் ஊழியர் தெரிவித்ததன் மூலம் தற்போது இத்தகவல் தெரியவந்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.