Show all

ஆனால் இணையம் கிடைக்கவில்லையே! தொலைத்தொடர்பு நிறுவனங்களிலேயே குறைந்த கட்டணம் கொண்டிருப்பது பிஎஸ்என்எல்லே

பிஎஸ்என்எல்லில் நான்காம் தலைமுறை சேவை இல்லை என்கிற காரணத்தால், அதில் இணையம் கிடைக்காது. பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ஆண்டு விடுதலை நாளன்று நான்காம் தலைமுறை சேவை அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்நிறுவனம் சரியான நான்காம் தலைமுறை சேவை வெளியீட்டு நாளை இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

11,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஜியோ, ஏர்டெல், வோடா ஐடியா ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்களை விட பிஎஸ்என்எல் அரசு தொலைத்தொடர்பு நிறுவனம் குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கினாலும், அதில் நான்காம் தலைமுறை சேவை இல்லை என்கிற காரணத்தால், அதில் இணையம் கிடைக்காது. 

பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு இணைப்பில்- இணையம் கிடைக்காத அடிப்படையில்- மற்ற ஜியோ, ஏர்டெல், வோடா ஐடியா ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்களை காட்டிலும், பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு இணைப்பிற்கு அதன் வாடிக்கையாளர்கள் செலுத்தும் தொகை மிக மிக அதிகமே ஆகும். அதனாலேயே பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு நிறுவனத்தில் நான்காம் தலைமுறை சேவை (4ஜி) இல்லை என்று அறிந்தவர்கள் அதை தங்கள் விருப்ப தொலைத் தொடர்பு நிறுவனப் பட்டியலில் வைப்பதே இல்லை.

பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ஆண்டு விடுதலை நாளன்று நான்காம் தலைமுறை சேவை அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்நிறுவனம் சரியான நான்காம் தலைமுறை சேவை வெளியீட்டு நாளை இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) உடன் நான்காம் தலைமுறை சேவைகளை அறிமுகப்படுத்தும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நான்காம் தலைமுறை சேவைகளுக்கு இந்திய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். 

குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியா முழுவதும் 1 லட்சம் தொலைத்தொடர்பு கோபுரங்களை நிறுவவுள்ளது. இதில் பீகாரில் மட்டும் 40,000 தொலைத்தொடர்பு கோபுரங்களை நிறுவ பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. 

பிஎஸ்என்எல் அறிமுகம் செய்த ரூ.666 முன்கட்டணத் திட்டம் ஆனது அன்றாடம் 2ஜிபி தரவு நன்மையை வழங்குகிறது. மேலும் இந்ததிட்டத்தின் காலக்கெடு 110 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், அன்றாடம் 100 சேதிகள் வழங்குகிறுது.

பிஎஸ்என்எல் நான்காம் தலைமுறை சேவை வழங்கும் போது இது மிக மிக சிக்கனமான திட்டமாக அமையும். வேறு எந்த தொலைத் தொடர்பு நிறுவனமும் பிஎஸ்என்எல்லுக்கு ஈடு இணையாக முடியாமல் போகும்.

அண்மையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.197 முன்கட்டணத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் அன்றாடம் 2ஜிபி தரவு, வரம்பற்ற குரல் அழைப்புகள் 18 நாட்களுக்கு கிடைக்கும். ஆனால் இந்த ரூ.197 திட்டத்தின் காலக்கெடு 150 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் 18 நாட்களுக்கு பிறகு நீங்கள் அழைப்புகளைச் செய்ய விரும்பினால், வேறு ஒரு திட்டத்தில் கட்டண ஏற்றம் செய்ய வேண்டும். 

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் 197 திட்டத்தில் 18 நாட்களுக்கு மட்டுமே தரவு மற்றும் குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தில் மீள்நிரப்பு (ரீசார்ஜ்) செய்பவர்களுக்கு 150 நாட்களுக்கு காலக்கெடு உள்ளது. எனவே இதன் மூலம் உள்வரும் அழைப்புகள் 150 நாட்களுக்கு கிடைக்கும். அதிகம் அழைப்புகளை மேற்கொள்ளாமல் உள்வரும் அழைப்புகளை மட்டும் பயன்படுத்தும் மகன் மகள்களின் அழைப்பிற்கு காத்திருக்கும் அகவை முதிர்ந்தவர்களுக்கு இது தற்போதும் கூட அருமையான திட்டம் ஆகும்.

மொத்தத்தில் பிஎஸ்என்எல்லில் நான்காவது தலைமுறை சேவை அனைத்து பகுதிகளிலும் முன்னெடுக்கப்படும் போது, மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பீதிக்குள்ளாவது உறுதி. ஒன்றிய பாஜக அரசு இதன்பொருட்டு விரைந்து களப்பணியாற்றுவது தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு செய்யும் சிறந்த சேவையாக பார்க்கப்படும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,168.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.