Show all

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பிழைக்கவே முடியாது என்ற அச்சத்தில் பாஜக

09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத்தில் கடந்த 19 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் இரண்டு மாதங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், தமிழ்தொடர்ஆண்டு-5121ல் (2019) வரவிருக்கும் மக்களவை தேர்தலிலும் உறுதியாக எதிரொலிக்கும். இத்தேர்தலில் அக்கட்சிக்கு காங்கிரஸுடன் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

குஜராத்தில் தங்கள் மேற்கொண்டிருந்த அதிகார பலத்தையே இந்திய அரசை ஆள தாங்களே தகுதியானவர்கள் என்று நடித்து, வெற்று வாக்குறுதிகளைக் கொட்டி நடுவண் அரசில் ஆட்சியைப் பிடித்த மோடியின் திட்டங்கள்- பாபாராம்தேவையும், அமித்சா மகனையும், அம்பானி குடும்பத்தாரையும் வாழவைத்து இந்திய மக்களை பிச்சைக்காரர்களாகவும், குற்றப் பரம்பரை மக்களாகவும் ஆக்கிய மோடியை- முதலில் குஜராத்திலிருந்தும் பின்னர் நடுவண் அரசிலிருந்தும் அப்புறப் படுத்துவது என்று முடிவுக்கு மக்கள் வந்து விட்ட நிலையில், கிடைத்ததைப் பிடித்துக் கொண்டு கரையேறுவது என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் குஜராத் ஆகும். இதனால் பாஜகவின் கவுரவமாகக் கருதப்படும் குஜராத்தில் வெற்றி பெறுவது அக்கட்சிக்கு மிகவும் அவசியமாகி விட்டது.

இதனால் குஜராத்தின் 182 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை அன்றாடம் மதிப்பீடு செய்யும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.

இது குறித்து பாஜக தேசிய நிர்வாகிகள் வட்டாரம், ‘இந்தமுறை குஜராத்தில் பாஜக வெற்றி பெறுவது சாத்தியமல்ல என்பதை தலைமை நன்கு உணர்ந்துள்ளது.

இதனால், உ.பி.யில் பயன்படுத்திய தனியார் நிறுவனம் மூலம் அன்றாடம் சர்வே நடத்தி வருகிறோம். இதன் பலனாக இந்தமுறை தொகுதி எண்ணிக்கை குறைந்தாலும் கட்சியை காப்பாற்றியாக வேண்டும்

என்று தெரிவித்தனர்.

வழக்கமாக, தேர்தல் நேரங்களில் ஒரு தொகுதியில் நடைபெறும் அரசியல் கட்சியின் கூட்டம் அதன் வாக்காளர்கள் மனநிலையை மாற்றி விடுவதாகக் கருதப்படுகிறது. சில சமயம், அப்பகுதி ஆளும் கட்சி நிர்வாகிகளின் நடவடிக்கை வாக்காளர்கள் இடையே அதிருப்தியை உருவாக்கி விடுகிறது. இதுபோன்ற காரணங்களால் பொதுமக்கள் மனம் மாறி தங்களுக்கு எதிராகத் திரும்பி விடக்கூடாது என பாஜக கருதுகிறது.

இதற்காகவே அக்கட்சி ஆய்வு மேற்கொண்டுள்ளது. கடந்த சில வாரங்களாக மோடி குஜராத்தில் வெளியிட்டு வரும் அறிவிப்புகளும், இதன் அடிப்படையிலானவை என கூறப்படுகிறது.

மொத்தம் 182 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட குஜராத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 119 தொகுதிகள் பாஜக வசமானது. காங்கிஸ் 57, தேசியவாத காங்கிரஸ் 2, ஐக்கிய ஜனதா தளம் 1, இதர கட்சிகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

இந்தத் தேர்தலில் தப்பிக்க என்னென்ன உள்ளடி வேலைகளிலெல்லாம் பாஜக ஈடுபட்டாலும், பாஜகவை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் மக்களும் எதிர்கட்சிகளும் இருக்கிறார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.