Show all

தடுப்பூசி போடுவது பிறந்தநாளுக்கு அணிச்சல் வெட்டுவது போன்றது அல்ல! முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் காட்டம்

தடுப்பூசி போடுவது என்பது பிறந்தநாளுக்கு அணிச்சல் வெட்டுவது போன்றது அல்ல. தடுப்பூசி போடுவது நலங்குத்துறை விரைவாகவும் சிறப்பாகவும் முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு. என்று ஒன்றிய பாஜக அரசின் மோடி கொண்டாட்டப் போக்கை இடித்துரைத்துள்ளார் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

03,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: முந்தாநாள், கூடுதலாக கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டதை, மோடி பிறந்த நாளோடு பொருத்திக் கொண்டாடி வரும் பாஜகவினரை பலரும் எள்ளி நகையாடி வருகின்;றனர். 

தடுப்பூசி போடுவது என்பது பிறந்தநாளுக்கு அணிச்சல்;;;; வெட்டுவது போன்றது அல்ல. தடுப்பூசி போடுவது நலங்குத்துறை விரைவாகவும் சிறப்பாகவும் முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு. ஒரு தொடர் நடவடிக்கை. அதை பிறந்தநாளில் மட்டுமின்றி, அன்றாடம் விரைவுபடுத்த வேண்டும். என்று முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் விமர்சித்துள்ளார்.

மேலும், முந்தாநாள் இந்தியா முழுக்க 2.5 கோடி தடுப்பூசி போடப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், இதற்காக ஏன் மோடி பிறந்தநாள்வரை காத்திருக்க வேண்டும்? ஒருவேளை, மோடி பிறந்தநாள் இந்த ஆண்டின் இறுதியில் என்றால், ஆண்டின் கடைசி நாளில்தான் 2.5 கோடி தடுப்பூசி போடுவார்களா? என்றும் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தநிலையில், இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் இராகுல்காந்தியும் விமர்சித்துள்ளார். அவர் தனது கீச்சுப் பக்கத்தில், 2.5 கோடி தடுப்பூசி போடப்படும் நாட்கள் நிறைய வர வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இதுதான் நாட்டுக்கு தேவை என்று கூறியுள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,011.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.