Show all

இப்போதுதான் தொடங்கியுள்ளது பயணத்தை! தமிழ்நாட்டிற்கு முப்பத்தி மூன்று ஆண்டுகள் பின்தங்கியுள்ள உத்தரப்பிரதேசம்

முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு செயல்படுத்திய ஒரு திட்டத்தை, உத்தரப்பிரதேசத்தில் வாக்குறுதியாக அளித்துள்ளது ஆளும் பாஜக

27,தை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அப்போதைய திமுக அரசால் கொண்டு வரப்பட்டு, செயலில் உள்ள திட்டம் ஒன்றை உத்தர பிரதேசத்தில் பாஜக இந்த முறை தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளது.

வளர்ச்சி திட்டங்கள், சமூக நீதி திட்டங்கள் என்று எடுத்துக்கொண்டால் அதில் எப்போதும் வட மாநிலங்களுக்கு ஏன் ஒட்டுமொத்த இந்தியாவிற்கு தமிழ்நாடுதான் முன்னோடி. ஒப்பீட்டளவில் வடமாநிலங்களை விட தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் தான் அதிகளவிலான வளர்ச்சி திட்டங்கள், சமூக நீதி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தமிழ்நாடு போன்று தென் மாநிலங்களில் கொண்டு வரப்படும் பல முற்போக்கான திட்டங்கள் பல ஆண்டுகள் கழித்துதான் வடமாநிலங்களில் நிறைவேற்றப்பட்டு உள்ளன. வளர்ச்சி திட்டங்களில் பல மாநிலங்களுக்கு தமிழ்நாடுதான் எப்போதும் முன்மாதிரி (ரோல் மாடல்) ஆகும்.

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, மிதிவண்டி, இலவச பேருந்து பயணஅட்டை மற்றும் அம்மா உணவகம், சத்துணவு போன்ற திட்டங்கள் இந்தியாவிற்கே முன்னோடி திட்டங்களாக அமைந்தன. அதேபோல் பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பேருந்து பயணம் போன்ற தமிழ்நாடு அரசின் பல திட்டங்கள் மொத்த நாட்டிற்கும் எடுத்துக்காட்டாக அமைந்து இருக்கின்றன. தமிழ்நாடு அரசின் இந்த திட்டங்களை பார்த்து வடஇந்திய கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வழங்குவது பல முறை நடந்துள்ளது.

காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களைப் பார்த்து தாங்கள் ஆளும் மாநிலங்களிலும் வாக்குறுதிகளை வழங்கிய நிகழ்வுகள் இதற்கு முன் நடந்துள்ளன. அந்த வகையில்தான் தமிழ்நாடு அரசின் முக்கியமான திட்டம் ஒன்றை உத்தர பிரதேச பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் வழங்கி உள்ளது. 

உத்தர பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. நாளை சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்கு பதிவு உத்தர பிரதேசத்தில் நடக்க உள்ளது. சரியாக தேர்தல் நடப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக அங்கு பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆளும் பாஜக கட்சி அங்கு மீண்டும் ஆட்சியை பிடிக்கும் எண்ணத்தில் பல முதன்மை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பாஜக வெளியிட்டு இருக்கும் வாக்குறுதிகளில் முதன்மையானதாக, வேளாண் பாசனத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை பாஜக அறிவித்துள்ளது. 
முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்நாட்டில் வேளாண் பாசனத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒன்றிய அரசின் சில கட்டுப்பாடுகளால் எதிர்ப்புகள் வந்தாலும் கூட, அதை எல்லாம் மீறி அப்போதைய திமுக அரசு இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியது. 

அதாவது 33 வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டில் 'வேளாண் பாசனத்திற்கு இலவச மின்சாரம்' என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டு, அது நிறைவேற்றவும் பட்டது. அந்த வாக்குறுதியைத்தான் தற்போது உத்தர பிரதேசத்தில் பாஜக வழங்கி உள்ளது.

ஆம் 33 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட வேளாண் பாசனத்திற்கான இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை பாஜக இத்தனை ஆண்டுகள் கழித்து உத்தர பிரதேசத்தில் வாக்குறுதியாக அறிவித்துள்ளது. 

முன்று வேளாண் சட்டங்கள் காரணமாக இந்தியா முழுவதும் உழவர்கள் பாஜக மீது அதிருப்தியில் உள்ளனர். பல இடங்களில் உழவர்கள் பாஜகவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் வேளாண் பெருமக்களைக் கவரும் வகைக்கு பாஜக இந்த வாக்குறுதியை அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் பெண்கள் அனைவருக்கும் நகர பேருந்துகளில் இலவச பயணம் அறிவிக்கப்பட்டது போல உத்தர பிரதேசத்தில் 60 அகவை தாண்டிய பெண்களுக்கு பொதுப்போக்குவரத்து இலவசம் என்று பாஜக அறிவித்துள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,154.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.