Show all

அடிப்படையே இல்லாத வழக்கு! அறிவித்தது அறங்கூற்றுமன்றம் அபராதம் ரூபாய் இருபத்தைந்தாயிரம்

பொதுநலனோ அல்லது தனிப்பட்ட நலனோ அல்லது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களோ இல்லாமால், அறங்கூற்றுமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் அந்த வழக்கு பதிகை செய்யப்பட்டுள்ளதாக, அபராதம் ரூபாய் இருபத்தைந்தாயிரம் விதிக்கப்பட்;டுள்ளது, அடிப்படையே இல்லாமல் ஒன்றிய அரசு சட்டத்தை கொண்டாடிய சுஜித் பிரபுவுக்கு.

20,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: கனரக சரக்கு வண்டிகள் கட்டமைப்பு தொடர்பாக ஒன்றிய அரசின் சட்டத்தை பின்பற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து உயர் அறங்டகூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விபத்துகளை தவிர்க்கவும், எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிக்கவும் கனரக சரக்கு வண்டிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வகுத்து, அவற்றை சட்டமாக இயற்றியது ஒன்றிய அரசு. 

அந்த வழிமுறைகளை தமிழ்நாடு அரசோ, வண்டிகளை பதிவு செய்யும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களோ பின்பற்றவில்லை என்று தெரிவித்து, ஒன்றிய அரசு சட்டத்தை தமிழ்நாடு அரசு பின்பற்ற உத்தரவிடக் கோரி சென்னையில் வசித்து வரும் சுஜித் பிரபு துரை என்பவர் பொதுநல வழக்கு தலைப்பில் பதிகை செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை அறங்கூற்றுவர் முனிஷ்வர் நாத் பண்டாரி, அறங்கூற்றுவர் பரத சக்கரவர்த்தி அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், பொதுநலனோ அல்லது தனிப்பட்ட நலனோ அல்லது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களோ இல்லாமால், அறங்கூற்றுமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் இநத வழக்கு பதிகை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

எந்த வித ஆதாரங்களும் இன்றி மனு பதிகை செய்யப்பட்ட நிலையில், ஆதாரங்களை கொடுக்க இரண்டு கிழமைகள் காலக்கெடு அளிக்கப்பட்டும் ஆதாரங்களை பதிகை செய்யாததால் 25,000 ரூபாய் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்து அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டனர்.

இந்த அபராத தொகையை 15 நாட்களில் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு செலுத்தவும் உத்தரவிட்டுள்ளனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,207. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.