Show all

தலைமைஅமைச்சர் மோடியின் பயன்பாட்டிற்கான காரின் விலை பனிரெண்டு கோடியாம்!

தலைமைஅமைச்சர் மோடி முதல் முறை பதவியேற்றதில் இருந்து நான்கு வகைக் கார்கள் பாதுகாப்பு மேம்பாட்டிற்காக மாற்றப்பட்டிருக்கிறது. தற்போது அவருக்கு பயணப்பாதுகாப்பு அளிப்பது நான்காவது வகையாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

13,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: தலைமைஅமைச்சர் மோடியின் சுற்றுப் பயணங்களின் போது அவருக்குப் பாதுகாப்பு அளிக்க நவீன கார்கள் பயன் படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய மெர்சிடிஸ் மேபெக் எஸ் 650 வகை கார்கள் வாங்கப்பட்டு உள்ளது. இந்தக் கார் ஒன்றின் விலை ரு.12 கோடியாம். பாதுகாப்பு அதிகாரிகள் இதுபோன்ற 2 கார்களை வாங்கி உள்ளனர். 

இந்தக் காரில் வி.ஆர்.10 தரத்தில் அதிநவீன பாதுகாப்பு வசதிகள் உள்ளன. ரசிய அதிபர் விளாடி மிர் புதின் அண்மையில் இந்தியா வந்த போது இந்தக் கார்கள் தலைமைஅமைச்சரின் பயன்பாட்டிற்காக டெல்லியில் உள்ள ஐதராபாத் விருந்தினர் இல்லத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்தக் காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கார் நிற்கும் இடத்தில் இருந்து 2 மீட்டர் சுற்றளவில் சுமார் 15 கிலோ எடையுள்ள வெடிகுண்டு வெடித்தாலும் காருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

காரின் கண்ணாடிகள் துப்பாக்கி குண்டு துளைக்க முடியாத அளவுக்கு வலிமை கொண்டவை. மேலும் காரின் உள்ளே பாலிகார்பனேட் பூச்சுபூசப்பட்டு உள்ளது. ஏ.கே.47 வகை துப்பாக்கி கொண்டு சுட்டாலும் காருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

தலைமைஅமைச்சர் மோடி கடந்த முதல்முறை தலைமைஅமைச்சர் பொறுப்பேற்றபோது அவர் பி.எம்.டபிள்யூ 7 வரிசை வகைக் கார்களையே பயன் படுத்தினார். அதன்பிறகு லேன்ட் ரோவர் வகைக் கார்களில் பயணம் செய்தார். பின்னர் டொயோட்டா லேன்ட் குருசர் வகைக் கார்களை பயன்படுத்தினார். இப்போது மெர்சிடிஸ் மெபெக் எஸ் 650 வகைக் கார்களுக்கு மாறியுள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,111. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.