Show all

கமலஹாசன் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகுவது உறுதியாம்! விக்ரம்-2 விரைவில் வெளியாக வேண்டியது காரணமாம்

தற்போது கமலஹாசனின் விக்ரம் படத்தின் படபிடிப்புக்காக அவர் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகுகிறார் என்ற செய்தி உறுதியாகி இருக்கிறது.

08,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமலஹாசன் விலகுவது உறுதி என்று தெரியவருகிறது. தொலைகாட்சியில் கமலுடன் பணியாற்றிய ஒருவரின் கீச்சுச் செய்தி கமலஹாசனின் பிக்பாஸ் விலகலை உறுதி செய்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து பருவங்களையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வந்தார்.

தமிழில் 5 பருவங்களைக் கடந்த பிக்பாஸ், தற்போது புதிய பரிமாணத்தில் 'பிக்பாஸ் அல்டிமேட்' என்ற பெயரில் எண்ணிமத் தளத்தில் ஒளிபரப்பாகிறது.

அடுத்த கிழமை முதல் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமலுக்கு மாற்றாக நடிகை இரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க போவதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில், அந்த செய்தியை உறுதியாக்கும் வகையில் வந்துள்ள செய்தி, பிக்பாஸ் கொண்டாடிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில்,  கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட போது  நடிகை இரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. ஆனால், இரம்யா கிருஷ்ணன் தெலுங்கிலும் பிக் பாஸ் சீசனை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

பலமுறை கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு போக இருப்பதாக வதந்திகள் பரவி இருக்கின்றன, ஆனால் அவை வதந்திகளாகவே இருந்திருக்கின்றன.

ஆனால், தற்போது கமலஹாசனின் விக்ரம் படத்தின் படபிடிப்புக்காக அவர் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகுகிறார் என்ற செய்தி உறுதியாகி இருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் கமலஹாசனின் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் பலத்த வரவேற்பை பெற்றது. கமலஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்ட விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தின் படபிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்றுவருகிறது.

கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிவருகிறார். கமல்ஹாசன் தயாரித்து நடித்து வரும் விக்ரம் திரைப்படம் விரைவில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,165.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.