Show all

ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத் அதிரடி!

தாகத் திரைப்படத்தின் தோல்வியை அடுத்து கங்கனா ரனாவத் மீண்டும் இயக்குனராகியுள்ளார். அந்தத் திரைப்படம் இந்திரா காந்தி பற்றியதாம்.

17,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தாகத் திரைப்படம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கங்கனா ரனாவத் மீண்டும் இயக்குனர் என்கிற அதிரடி முடிவெடுத்துள்ளார்.

ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ள தாகத் திரைப்படம் கடந்த கிழமை திரையரங்குகளில் வெளியானது. கங்கனா ரனாவத் இந்தப்படம் அதிரடிப்படமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால் தாகத் திரைப்படம், எதிர்பார்த்த அளவிற்கு திரையரங்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 

படத்தின் செலவுத் திட்டத்தை ஒப்பிடுகையில் அதன் ஒட்டுமொத்த வசூல், தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சுமார் 90 கோடி மதிப்பில் தயாரான இந்த திரைப்படம், வெறுமனே 3 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தாகத் திரைப்படத்தின் தோல்வியை அடுத்து கங்கனா ரனாவத் மீண்டும் இயக்குனராகியுள்ளார். அந்தத் திரைப்படம் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறாக இல்லாமல் அவரது நெருக்கடிசட்ட காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும் தொகுத்து திரைப்படமாக உருவாகவுள்ளது. மேலும் இந்த படத்திற்கு 'எமர்ஜென்சி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் கங்கனா ரனாவத் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்குமுன் கங்கனா ரனாவத் இயக்கி நடித்த படம் மணிகர்னிகா மிகப்பெரிய வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,265.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.