பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் தளபதி 66 படத்தில் விஜய்யின் நண்பனாக நடிக்க யோகிபாபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 22,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 66 என்று பெயரிடப்பட்டுள்ள படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பேரறிமுகத் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு கதைத்தலைவியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். முதன்மை வேடத்தில் சரத்குமார் நடிக்கிறார். இப்படம் விஜய்யின் தொடக்கக் கட்டத்தில் வெளியான பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற குடும்ப பின்னணி படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தளபதி 66 படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதில் முதன்மை வேடத்தில் நடிகர் யோகிபாபு நடித்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த தகவல் குறித்த அதிகாரப்பாடான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குமுன் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல், சர்க்கார், பீஸ்ட் ஆகிய படங்களில் யோகிபாபு நடித்திருந்ததால், யோகிபாபு கொண்டாடிகள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருக்கின்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,239.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.