Show all

யாருக்கு சம்பளம் அதிகம்! விஜய் தொலைக்காட்சி நடிகைகளில்

தற்போது சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தடம்பதித்து வரும் நிலை உருவாகியுள்ளது. சின்னத்திரையில் பேரறிமுகமாக விளங்கும் விஜய் தொலைக்காட்சியின் நடிகைகள் சம்பளம் குறித்த தகவலுக்கானது இந்தக் கட்டுரை.

23,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: கடந்த காலங்களில் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்காத கலைத்தலைவிகளே சின்னத்திரையில் நடித்து வந்த நிலையில், தற்போது சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தடம்பதித்து வரும் நிலை உருவாகியுள்ளது.

ஆனால் சம்பளம் என்று பார்த்தால் வெள்ளித்திரையில் நடிகைகள் ஒரு படத்திற்கு கோடி கணக்கில் சம்பளத்தை பெற்று வருகின்றனர். தற்போது இவர்களுக்கு அறைகூவல் விடும் வகையில் சின்னத்திரை நடிகைகளும் அதிக சம்பளம் பெற்று வருகின்றனர். 

பொதுவாக சின்னத்திரை படப்பிடிப்பு மாதத்திற்கு 15 நாட்கள் நடைபெறுகிறது. அதற்கு ஏற்றார்போல் நடிகைகளுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் மற்ற தொலைக்காட்சிகளை விட விஜய் தொலைக்காட்சி நடிகைகளுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு முதன்மைக் காரணம் விஜய் தொலைக்காட்சித் தொடர்களுக்கு கொண்டாடிகள் கொடுக்கும் வரவேற்பே.

விஜய் தொலைக்காட்சியின் ஒரு தொடரில் நடித்தால் போதும் அடுத்து வெள்ளித்திரையில் வாய்ப்பு பெற்று விடலாம் என்று கூறுவார்கள். இந்தக் கருத்தை பல நடிகைகள் நிரூபித்தும் காட்டியுள்ளனர். இதனால் விஜய் தொலைக்காட்சி நடிகர் நடிகைகளும் கொண்டாடிகள் நடுவே பேரறிமுகமாக விளங்குகின்றனர். இதனால் அவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், விஜய் தொலைக்காட்சி தொடர் நடிகைகளின் ஒரு நாள் அல்லது ஒரு அத்தியாயத்தின் சம்பள பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் சுஜிதா ரூ.12,000, ஹேமா ரூ.6500, காவியா ரூ.4,500, சாய் காயத்ரி ரூ.5000 சம்பளமாக பெறுகின்றனர். 

நாம் இருவர் நமக்கு இருவர் ரக்சிதா ரூ.10000, காயத்ரி ரூ.5,500, ஜனனி ரூ.4000 சம்பளமாக பெறுகின்றனர்.

தென்றல் வந்து என்னை தொடும் பவித்ரா ரூ.8000 சம்பளமும், பாவம் கணேசன் நேகா கௌடா ரூ.6000 பெறுகின்றனர்
 
வேலைக்காரன் கோமதி பிரியா ரூ.4000, ராஜபார்வை ராஷ்மி ஜெயராஜ் ரூ.6000 சம்பளமும் வாங்குகின்றனர்.

மௌன ராகம் ரவீனா ரூ.6,000, ராஜா ராணி 2 ஆலியா மானசா ரூ.13,000, அர்ச்சனா ரூ.4,500, பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்கும் ரோசினி ரூ.15,000, பரினா ரூ.10,000, ஸ்ரூபசிறி 10,000, ஸ்வீட்டி 3500 சம்பளமாக பெறுகின்றனர்.

பாக்கியலட்சுமி தொடரில் நடிக்கும் சுசித்ரா ரூ.9000, ரித்திகா ரூ.4,500, திவ்யா ரூ.4,500, நேகா ரூ.3000 சம்பளமாக பெறுகின்றனர். 

இவர்களில் அனைத்து நடிகைகளையும் விட பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் ரோசினி ஹரிப்பரியன் நாள் ஒன்றுக்கு ரூ 15000 சம்பளமாக பெறுகிறார். ஆனால் தற்போது அவர் அந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,062.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.