Show all

வெந்து தணிந்தது காடு!

‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய சிம்பு, கவுதம் மேனன் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் வெந்து தணிந்தது காடு

22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: சிம்பு, கவுதம் மேனன் மூன்றாவது முறையாக இணையும் படத்தின் தலைப்பை மாற்றி உள்ள படக்குழு, அதன் முதல் பார்வை விளம்பர ஒட்டியை வெளியிட்டுள்ளது. 

ஏற்கனவே ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய சிம்பு, கவுதம் மேனன் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, அடுத்ததாக கவுதம் மேனனுடன் கூட்டணி அமைக்க உள்ளார். இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேசனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்க உள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் இப்படத்திற்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஆறு மாதங்களுக்கு முன்பு படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பை திடீரென மாற்றி உள்ளனர். அதன்படி இப்படத்திற்கு ‘வெந்து தணிந்தது காடு’ என புதிதாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் சிம்புவின் புதுவிதமான தோற்றம் அடங்கிய முதல் பார்வை விளம்பர ஒட்டியையும் வெளியிட்டுள்ளனர். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.