நேர்மறையான எண்ணமும், எதிர்மறையான எண்ணமும் நம் மனதில் உதிக்கின்றன. ஆனால் அதிகமாக எதிர் மறையான எண்ணமே நம்மை ஆட்கொள்கிறது ஏன்? என்று என்னிடம் கேட்கப்பட்ட வினாவிற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. 21,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5127: நேர்மறை மற்றும் எதிர்மறை என்கிற சொற்கள் தமிழ்அடிப்படையான சொற்கள் இல்லை. ஐரோப்பிய தாக்கத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட தமிழ்ச்சொற்கள் ஆகும். இந்தச் சொற்களை ஆய்கிற போது, நமது சொந்த உழைப்பில் இருந்து வாடகையாக ஐரோப்பிய மண்ணுக்கான புலமைஆதாயத்தை கடவுள் பகிரும் என்பதை கட்டாயம் தமிழ்மக்கள் நினைவில் நிறுத்த வேண்டும். இந்த ஆய்வு நமக்கு ஒரு நூலைத் தருமானால் அந்த நூல் கொண்டாடப்படும் போதெல்லாம் ஐரோப்பிய இனத்திற்கான புலமை ஆதாயமாக தமிழினம் ஒரு வாடகை செலுத்த வேண்டியிருக்கும். ஆகவே உங்கள் வினாவிற்கான என்னுடைய விடையை மாண்பு மற்றும் குற்றம் என்கிற பொருள் பொதிந்த தமிழ்த்தலைப்புகளில் முன்னெடுக்கப் போகிறேன். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது ஒரு தமிழ்ச்சொலவடை அல்லவா? என்று நான் பேசத் தொடங்கியவுடனேயே- எனக்குப் பேரளவு துன்பத்தை தருகிற சுற்றங்களின் குற்றத்தை நான் ஏன் பார்க்கக் கூடாது என்று நீங்கள் சொல்லாடலாம்தான். நாம்யாரும், நடப்பில், காரணத்தோடும், முன்பின் தொடர்ச்சியோடும், ஒன்றின் அ முதல் ன் வரையிலான முழுமையைப் பார்க்கிற ஆழஅறிவு மற்றும் இருமைக் கோட்பாடுஆன தமிழியல் கண்ணேட்டத்தில் எதையும் அணுகுவது இல்லை. எதையும் இடுகுறியாக, எந்த மொழியினத்தின் எந்த மொழியின இயலையும் அப்படியே எடுத்துக் கொண்டு உலகினரின் ஓர்மைக்கோட்பாட்டு அடிப்படையில் மேலோட்டமாகப் பார்க்கிற சார்ந்திருத்தில் என்கிற. உடைமை கொண்டாடாத வாடகைசெலுத்து நிலையில், இயங்கிக் கொண்டிருக்கிறோம். அதனால், எனக்குப் பேரளவு துன்பத்தை தருகிற சுற்றங்களின் குற்றத்தை நான் ஏன் பார்க்கக் கூடாது என்று நீங்கள் சொல்லாடுகிற நிலை எழுகிறது. இதற்கு நேர்மறை எதிர்மறை என்கிற இடுகுறிகளை கையில் எடுத்துக் கொண்டு இயங்குகிற நிலை வருகிறது. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது ஒரு தமிழ்ச்சொலவடை அல்லவா? என்று நான் என்பேச்சை இப்போது தொடருகிறேன். சுற்றம் என்பது வெறுமனே சொந்த பந்தம் என்கிற உறவுகள் மட்டும் அல்ல. இது என்னுடைது என்று நீங்கள் ஒப்புக்கொடுத்த அனைத்தும் உங்கள் சுற்றம் ஆகும். யாரோ ஒருவர் எனக்குத் துன்பம் தரமுடிகிறது என்றால், அதற்கு அவருக்கு நான் என்னை ஒப்புக்கொடுத்தது காரணம் ஆகிறது. இதற்குத் தீர்வு என்ன? யாருக்கும் என்னை நான் ஒப்புக் கொடுக்கவே கூடாது என்பதா? ஆசையே- இயற்கையின் இத்தனை வளர்ச்சிக்கும் காரணம் என்பதை அப்படியே தூக்கி வீசி எறிந்துவிடுகிற வகையாக, ஆசையே துன்பத்திற்கு காரணம் என்கிற அறிவுரையை பின்பற்றுவது அல்ல. எது துன்பம் தருகிறதோ, யார் துன்பம் தருகின்றாரோ அதனிடமிருந்து மட்டும் விலகு என்பதே தமிழ்முன்னோர் ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரத்தில், தெளிவுபடுத்தும் தீர்வு ஆகும். இதை இப்படி திருக்குறள் விளக்கும். நட்புகளில் நண்பர்களை விட்டு விலகலாம். உறவுகளில் சொந்த பந்தங்களில் இருந்து விலகலாம். கூட்டுக்குடும்பம் சிக்கலாகிறபோது அதைவிட்டு விலகலாம். குடும்ப உறவுகளில், கணவன் அல்லது மனைவி, பிள்ளைகள், பெற்றோர் என்றால் இங்கே குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு அந்தக் குற்றத்தில் இருந்துதான் விலக வேண்டியிருக்கிறது. ஆம் குற்றத்தை நினைத்துக் கொண்டிருந்தால், துன்பத்தை நினைத்துக் கொண்டிருந்தால், தேவை எதுவானாலும் கடவுளிடம் கேட்டுப்பெற முடியும் என்பது புரியாமல் அது கிடைக்கவில்லை இது கிடைக்க வில்லை என்று புலம்பலை முன்னெடுத்துக் கொண்டிருந்தால் அதுவே எனது விரும்பம் என்றே கடவுள் புரிந்து கொள்ள முடியும். அதையே கடவுள் உங்களுக்கு முயக்கித்தர முடியும். இங்கே- கணவன் அல்லது மனைவி, பிள்ளைகள், பெற்றோர் இந்தக் குற்றத்தை செய்யக்கூடாது என்று பதிவு செய்வதில், குற்றமே, தலைமைத்தன்மை பெறுகிறது. என்று அன்றாடம், தொடர்ந்து பலமுறை வேண்டியிருந்தாலே உங்கள் தொடர்புகளை, மாண்புகளை நோக்கி கடவுளால் உறுதியாகத் திருப்பி விட முடியும். உறுதியாகத் தெரிந்து கொள்ளுங்கள், கடவுளுக்கு சொந்த இயக்கம் கிடையாது, நம்மிடம் இருந்து பெற்ற இயக்கத்திற்கு நம்மை முயக்குவதே கடவுள் என்கிற காரணம் பற்றி கடவுளுக்கு என்று தனியாக எந்தச் சட்டப்புத்தகமோ, சட்டமே கிடையவே கிடையாது. நீங்கள் எதிர்கொண்ட எந்தவொரு துன்பத்தையும் உங்களிடமே இருக்கிற சட்டப்புத்தகத்தில், உங்களிடமே இருக்கிற எழுதுகோலால், நீங்களே, நீங்கள் மட்டுமே திருத்த முடியும். தயவுகூர்ந்து, முடியாது என்கிற புலம்பலை, குற்றத்தை உங்கள் மனதில் பதிந்து, மேலும் மேலும் துன்பத்தை வாங்கிக் குவித்து, துவண்டு கொண்டே இருக்காதீர்கள். உங்கள் மனதை மாண்புகளின் பதிப்பாக வைத்துக்கொள்வது குறித்து இந்த இணைப்புக் கட்டுரையில் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
என்பதுதான் தீர்வு.
குடும்ப உறவு இப்படிப் பேணப்பட்டால் குற்றம் துன்பம் எல்லாம் காணாமல் போகும்.
கடவுளே!
விசும்பு தெய்வமே!
நெய்தல் திணை இறைக்கூறு தெய்வம் வருணனின் மாட்சிக்குரிய தொடர்புகளின் ஒத்துழைப்பை வழங்கி ஆவன செய்ய வேண்டுகிறேன்
கடவுளே!
விசும்பு தெய்வமே
அருள்செய்க
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,396.