உலகினர் கொண்டிராத, தமிழ்முன்னோர் மட்டுமே நிறுவியுள்ள இயல்கணக்கை தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்கிற நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. 18,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5127: இயல்பை ஆய்வது இயல்அறிவு (சயின்ஸ்) என்கிற துறையாகும். இயக்கத்தை ஆய்வது இயல்கணக்கு என்கிற துறையாகும். இயல்கணக்கு தமிழ்முன்னோர் மட்டுமே அறிந்ததும் நிறுவியதும் ஆன துறையாகும். இயல்கணக்கை நடப்புத் தமிழரோ உலகினரோ. கொண்டிருக்கவோ அறிந்திருக்கவோ, அறிய முயலவோ இல்லை. இயல்அறிவுத் துறையான இயல்பை, ஆய்வதை, கணியம் என்கிற தனித்துறையாக இயல்கணக்கு கொண்டுள்ளது. ஆனால் இயல்கணக்குத் துறையான இயக்கத்தை, ஆய்வதை, இயல்அறிவில் முன்னெடுக்க கிஞ்சித்தும் வாய்ப்பு இல்லை. ஏனென்றால் இயல்கணக்கை புரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் அதை மறுப்பதே இயல்அறிவின் அடிப்படை ஆகும். இயல்கணக்கு என்பது முதலெனப்படுவது இடமும் காலமும் என்பதில் உள்ள இடமான வெளியை, விண்வெளியை, வெளியின் மூன்றாவது நிலையானதும் தமிழ்முன்னோரால் ஐந்திரங்களில் ஒன்றாக பட்டியல் இடப்பட்டதுமான விசும்பை அதற்கு தமிழ்முன்னோர் முன்னெடுத்த மாற்றுத் தலைப்பான கடவுளைக் கணிப்பது ஆகும். இயல்அறிவு என்பது முதலெனப்படுவது- இடமும் காலமும் என்தில் உள்ள காலத்தை, காலத்தின் விரிவு ஆனதும் இயற்கையின் அனைத்திலும் மறைபொருளாக இருக்கிற நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்மறையை அறிவது ஆகும். தமிழ்முன்னோர் நிறுவிய ஐந்திரம் என்கிற தலைப்பில் இடம்பெற்றுகிற நிலம், நீர், தீ, காற்று நான்மறை என்கிற இயல்பு பொருளாக பார்க்கிற வகைக்கானது அல்ல. அவைகளும் திரங்கள் என்கிற இயக்கக் குவிப்பாக கணிக்க வேண்டியவைகள். இயல்கணக்கின் நான்காவது முன்னேற்றக்கலையான கணியத்தில் நிலம், நீர், தீ, காற்று நான்மறையாகவும்- இயல்;பாகவும், ஐந்தாவது முன்னேற்றக்கலையான மந்திரத்;தில் நிலம், நீர், தீ, காற்று, விசும்பு ஐந்திரங்களில் விசும்புக்கு இயக்கத்தைக் கொடுத்து விசும்பிடம் இருந்து முயக்கத்தை பெறுகிற இயக்கமாகவும் தமிழ்முன்னோரால் பட்டியல் இடப்படுகிறது. இயல்பு என்பது இப்படி இப்படி இருப்பது மட்டுமே என்கிற நிலைத்தன்மை குறித்த அறிவு ஆகும். இயக்கம் என்பது இப்படி இப்படியெல்லாம் ஆன முயக்கத்திற்கு இப்படி இப்படியான இயக்கமாக இருக்கும் என்கிற கணிப்பு ஆகும். இயல்அறிவு கணிப்புக்கு உரிய துறை அல்ல. நிமித்தகம் இயல்அறிவு அடிப்படையானதா என்கிற வினாவை பலகோடி மனிதர்கள் எழுப்பக் காண்கிறோம். அப்படி கேட்கிற வினாக்களுக்கு மூடநம்பிக்கை என்கிற விடைத்தருகிறது இயல்;;;;;அறிவு. ஆனால் இயல்கணக்கில் இருந்து பார்க்கிறபோது இயல்பின் அடிப்படையானது அல்ல இயக்கம், தொடர்பின் அடிப்படையானதே இயக்கம். அனைத்து இயல்புகளுக்கும் தொடர்பாக நின்று நிலைப்பது விசும்பு. விசும்பின் அடிப்படையான இயக்கம் கணிப்பிற்கு உரியது மட்டுமே என்று புரியவைக்கிறது. நாம் கட்டமைக்கிற கருவிகள் அனைத்தையும் நாம் இயக்க முடியுமே அன்றி அவைகள் இயங்க மாட்டா. நாம் இல்லாத போது அந்தக் கருவிகள் வெறுமனே பொருட்களே. நாம் யாரும் இல்லாமல இயங்குகிறோம். நம்மை எதுவும் இயக்கத் தேவையில்லை. அப்படியானால் நாம் யாருடைய, எதனுடைய படைப்பாக அல்லது கருவியாக இருக்க முடியுமா? மனிதன் யாராலோ எதனாலலோ படைக்கப்பட்டதான கோட்பாடு நூறு விழுக்காடு பிழை என்பதை இயல்கணக்கில் இருந்து கணிக்க முடியும். அப்படியான முயற்சியை இயல்அறிவுத் துறையில் இருந்து முன்னெடுப்பதற்கு இயல்அறிவுக்கு அடிப்படை இல்லை. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,393.