Show all

ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழர்களைப் பின்தொடர முடியுமா? அதற்குத் தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன

வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த, ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழர்களைப் பின்தொடர முடியுமா? அதற்குத் தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன? என்று கேட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

நடப்புத் தமிழ்த்தொடராண்டு 5125.

ஐயாயிரத்து நூற்று இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நாவலந்தேய இந்தியாவில் வாழ்ந்திருந்தவர்கள் தமிழர்கள் மட்டுமே. நாவலந்தேய இந்தியா என்பது கிழக்கே குணக்கடல் மேற்கே குடக்கடல் தெற்கே குமரிக்கடல் வடக்கே இமயமலை என்பதாக எல்லை கொண்டிருந்த பகுதியாகும்.

தமிழ்மொழியில் கடலை- அரலை, அரி, அலை, அழுவம், அளம், அளக்கர், ஆர்கலி, ஆலந்தை, ஆழி, ஈண்டுநீர், உரவுநீர், உவர், உவரி, உவா, ஓதம், ஓதவனம், ஓலம், கயம், கலி, கார்கோள், கிடங்கர், குண்டுநீர், குரவை, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தொடரல், தொன்னீர், தோழம், நரலை, நிலைநீர், நீத்தம், நீந்து, நீரகம், நிரதி, நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு, பரவை, பரு, பாரி, பாழி, பானல், பிரம்பு, புணர்ப்பு, புணரி, பெருநீர், பௌவம், மழு, முந்நீர், வரி, வலயம், வளைநீர், வாரி, வாரிதி, வீரை, வெண்டிரை, வேழாழி, வேலை என பல சொற்களால் குறிப்பிடப்படுகிறது  

கடலுக்குத் தமிழ்மொழியில் இத்தனை பெயர்கள் இருப்பதில் இருந்தே தொல் தமிழர்களுக்கும் கடலுக்கும் இருந்த நெருங்கியத் தொடர்பை அறியலாம் .

சோழர்கள் தென்கிழக்காசியாவில் முழுவதும் வணிகத்தில் கோலோச்சியபோது நாவலந்தேயத்தின் குணக்கடல் சோழர்கள் கடல் மற்றும் சோழர்கள் ஏரி  என்றே அழைக்கப்பட்டிருக்கிறது .  

தமிழும், தமிழர்வரலாறும் மன்னர்களைவிட வணிகர்கள் மூலமே உலகம் முழுவதும் நிலைபெற்றது, மீண்டும் அந்த உலகளாவிய  வணிகம் தமிழின் மூலம் நடைபெறும் வெற்றியே நிலைபெறும் என்பது தமிழர் உய்த்துணர வேண்டிய செய்தியாகும்.

நாவலந்தேயமும் கடவுளும் அறிந்திருந்த ஒரே மொழி தமிழ் மட்டுமே.

இமயமலைச் சாரலில் தோன்றிய நிலவாழ் உயிரிகள் பேரளவாக பயணித்தது வடக்கை நோக்கியே. இமயமலைச் சாரலில் தோன்றிய மனித இனத்திலும் பேரளவினர் பயணித்தது வடக்கு நோக்கியே.

வடக்கே பயணித்த நிலவாழ் உயிரிகள் இறையாகி இறையாகி அராபியத்தில் பேரளவான நிலத்தடி எரிபொருட்களுக்குக் காரணமாகின.

வடக்கே பயணித்த மனிதர்கள் ஆற்றங்கரை நோக்கிய பயணத்தில் முழு வாழ்க்கையையும் செலவளித்தார்கள். ஒற்றையினமாக அவர்கள் வாழவும் இல்லை. ஒற்றை மொழியெதையும் அவர்கள் கட்டிக்காக்கவும் இல்லை. பலமொழிகள் பேசித்திரிந்த பல்வேறு கூட்டங்களில், ஆடை நாகரிகம் கூட அடையாத காலத்தில்தான் ஒரு கூட்டம் திரும்பிப் பயணித்ததில் அவர்களுக்கு கிடைத்தது சிந்து ஆற்றங்கரை.

அந்தக் கூட்டம் முதலில் வடநாவலந்தேய தமிழரோடு கலந்ததில் வடஇந்தியாவில் நடப்பில் பேரளவாக வாழ்ந்து கொண்டிருக்கும் பலமொழி பலஇனக்குழு மக்களும் 

அடுத்து தென் நாவலந்தேயத் தமிழரோடு கலந்ததில் தெலுங்கர் கன்னடர் மலையாளி எல்லாம் உருவானார்கள்.

முதலாவது பிராமணர் பின்னர் முகமதியர் என்கிற நாவலந்தேய இந்தியாவின், ஒட்டுமொத்த அயலவர் குடியேற்றத்தின் எண்ணிக்கையை வெறுமனே நூறாயிரங்களில் அடக்கிவிட முடியும். 

இன்றைக்கு வடஇந்தியாவில் பேரளவாக பேசப்படுகிற ஹிந்தி மொழியின் பழமை வெறுமனே ஐநூறு ஆண்டுகள் மட்டுமே. அதுவும் ஹிந்தி தாய்மொழியாக வளர்த்தெடுக்கப்பட்ட மொழியும் அல்ல. அது, பேரளவு உருது மொழியும, சிற்றளவு சமஸ்கிருதம் பிராகிருதம் பாலி பாரசீகம் என்கிற மொழிகளும் கலந்த கலவை மொழியாகும். வெறுமனே ஐநூறு ஆண்டுகளில் இவ்வளவு நடந்துவிட அங்கே முன்னெடுக்கப்பட்ட இறுக்கமும் நெருக்கமும் ஆன கட்டமைப்பே காரணம் ஆகும். 

நாவலந்தேயத்தில் இருந்து குமரிக்கண்டம் வரை தமிழர்கள் நெருக்கமாகவும் இறுக்கமாகவும் கட்டமையாத காரணம் பற்றி புதிது புதிதாக தோன்றிய நடப்பு இந்தியாவின் இத்தனை இனக்குழுக்களும் தமிழரோடு கலந்துதான் வாழ்கிறார்கள்.

இந்தியாவில், தமிழர் தவிர்த்து, தமிழரில் இருந்து உருவான அனைத்து இனக்குழுக்களுக்கும்- இந்தியாவில் நெடுங்காலமாக தமிழர்கள் நெருக்கமாகவும் இறுக்கமாகவும் கட்டமையாத காரணம் பற்றியே, புதிது புதிதாக தோன்றிய இனமே தாங்கள் என்று தெளிவாகப் புரிந்திருக்கிற காரணத்தில், அவர்கள் தாங்கள் பற்றிய இடங்களில் நெருக்கமாகவும் இருக்கமாகவும் வாழ்ந்து இருக்கிறார்கள்.

தமிழர்கள் ஒட்டுமொத்த நாவலந்தேயத்தையும் இழந்த போதும், கொஞ்சமாக அமைந்த தமிழ்மாநிலத்திலும், தமிழ் என்கிற அடையாளத்தை முற்றாகத் துறந்து, தென்னிந்திய திரைப்பட சங்கம், இந்து சமய அறக்கட்டளை, திரவிட முன்னேற்றக்கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் பல்வேறு திராவிட இயக்கங்கள் என்று தமிழின் நெருக்கத்தையும் இறுக்கத்தையும் கட்டமைக்க வேண்டும் என்கிற காலக்கட்டாயத்தை கொஞ்சமும் மதிக்காமல், நூறு விழுக்காடு புறந்தள்ளி, தளர்த்தியான இயல்பிலேயே உலா வந்து கொண்டிருப்பதால் நமக்கு தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரம் கூட இல்லவேயல்லை. வெறுமனே மேலாண்மைக்கு வெட்டி பெருமை பேசி அங்கலாய்த்து கொண்டு இருக்கிறோம்.

ஒற்றை நோக்கமாக அனைத்து நிலையிலும் தமிழ்வழிக் கல்வி, பிள்ளைகளுக்குத் தமிழ்ப்பெயர் மட்டுமே சூட்டல், முற்றாக மதுவிலக்கு என்று ஒட்டுமொத்த தமிழரும் இயங்கினால் ஒட்டு மொத்த இந்தியாவும் தமிழர்பின்னல் தமிழினம் எங்கள் தாய் இனம் என்று கொண்டாடி பின்தொடரும். தமிழர்களுக்குத் தகுதியும், தொன்மையும் வரலாறும் இருக்கிறது. முயற்சி இல்லை. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,750.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.