Show all

நாம் அனைவரும் ஒருநாள் இறந்துபோகப் போகிறோம் என்றால், வாழ்வதன் நோக்கம் என்ன?

நாம் அனைவரும் ஒருநாள் இறந்துபோகப் போகிறோம் என்றால், வாழ்வதன் நோக்கம் என்ன? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட வினாவிற்கு விடையளிப்பதற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

02,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: ஓரறிவு உயிரியிலிருந்து ஆறாறிவு உயிரிகள் வரையிலான தான்தோன்றி கூட்டியக்கங்களின் வாழ்க்கை நோக்கம் பிறத்தல், வளர்தல், இறத்தல் என்பது ஆகும்.

ஈரறிவு உயிரியின் பிறத்தல் ஓரறிவு உயிரியில் இருக்கிறது. இறத்தல் என்பது அதற்கு அதன் எண்ணிக்கையால் பெற்ற இயல்பு எண்ணால் அது கொண்ட காலக்கெடுவாகும். 

இயல்அறிவில் (சயின்ஸ்) நிறுவப்படுகிற- உயிர்வளியில் ஒரு நேர் (எலக்ட்ரான்) ஒரு நிரை (புரட்டான்) என்கிற எண்ணிக்கையால் அதன் இயல்பு எண் ஒன்று என்றும், தங்கத்தில் 79 நேர் (எலக்ட்ரான்) 79 நிரை (புரட்டான்) என்கிற எண்ணிக்கையால் அதன் இயல்பு எண் 79 என்றும் பேசப்படுகிற செய்தி மாதிரி உயிரிகள் ஒவ்வொன்றும் நம்மால் கணக்கிடமுடியாத வகைமையில் அது ஒரு எண்ணிக்கையும், அதற்காக ஒரு இயல்பும், இயல்பு எண்ணும் ஒரு காலக்கெடுவும் கொண்டிருக்கும் என்று நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர்.

ஓரறிவு உயிரி வளர்தலில்- நமது மெய் புலனை அடுத்து, வாய்ப்புலன் அமைந்திட வேண்டும் என்கிற அதன் அனுபவத் தேடலில் கிடைத்ததே ஈரறிவு உயிரி ஆகும். 

ஓரறிவு உயிரி இறத்தலில் அது வளர்தலுக்கு நிலம், நீர், தீ, காற்று என்கிற தமிழ்முன்னோர் இறை என்று சுட்டுகிற நாற்திர தொகுப்புகளில் இருந்து இரை எடுத்துக் கொண்டு வளர்கிறது. 

இறத்தலில் அது இறையாகி போவதில் தன் உடலை நிலம், நீர், தீ, காற்று என்கிற- தமிழ்முன்னோர் இறை என்று சுட்டுகிற- நாற்திர தொகுப்புகளில் சேர்ப்பிக்கிறது. மீண்டும் நாற்திரத் தொகுப்பில் உருவாகிற புதிய உயிரி ஈரறிவு உயிரியாக உருவாகிறது. இது கிளவியாக்கம் எனப்படுகிறது. 

இயல்அறிவு சுட்டுகிற எவல்யூசனில் உயிரியிலிருந்தே மற்றொரு உயிரி (குரங்கிலிருந்து மனிதன்) கிளைப்பதாகச் சொல்லப்படுகிறது. தமிழ்முன்னோருக்கு இதில் உடன்பாடு இல்லை. குரங்கின் தேடல் விசும்பில் பதிவாகி, அடுத்த உயிரி மனிதன் தோன்றுவதைக் கிளவியாக்கம் என்கிறது தமிழ்.

நம்முடைய வளர்தலின் நோக்கம் தம்மின் தம்மக்கள் அறிவுடைமையைக் கொண்டாடுவது ஆகும். தமிழியலில் மட்டுமே அது பேசப்படுகிறது. உலகின் அனைத்து இயல்களும். முன்னோர்களை வழிகாட்டியாகக் கொண்டாட நிர்பந்தித்து பிள்ளைகளின் அறிவை முடமாக்கத் துடிக்கிறது. 

இயல்அறிவு வளர்ச்சியில் எவ்வளவோ உடைமைகள் உருவாக்கப்பட்டு விட்ட நிலையிலும், மனித இனம் உழைக்கவே தேவையில்லை என்கிற நிலைக்கு பேரளவாக கருவிகள் உருவாக்கப்பட்டுவிட்ட நிலையிலும்- மத, அரசியல் கோட்பாட்டு வழிகாட்டிகள் சமூகத்தை வழிநடத்தி பகிர்தலை முறைப்படுத்த மறுத்து கார்ப்ரேட்டுகளையும் ஒருவேளை சோற்றுக்கே வழியில்லாத ஏழைகளையும் கொண்ட ஏற்றதாழ்வுக்கு பாதுகாத்து வருகின்றனர். 

நம்முடைய வளர்தலின் நோக்கம் நம்முடைய அடுத்த தலைமுறையைச் சிறப்பாக உருவாக்குவதற்கு தொடர்ந்து தேடுவதுதான். நமது தேடலில் தெளிவாகத் தெரிவது:- மத, அரசியல்கோட்பாட்டு வழிகாட்டிகள் இந்த தலைமுறையையே முடமாக்கி வைத்துள்ளனர் என்பதேயாகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,376.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.