Show all

உங்கள் குழந்தைகளுக்கு சாதக அடிப்படையில் பெயர் சூட்ட

தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில் நியுமராலஜியை பின்பற்றுவோருக்கு-நியுமராலஜிக்கு மூலமும், தமிழ்முன்னோர் முன்னெடுத்த நான்காவது முன்னேற்றக் கலையுமான கணியத்தை நீண்ட காலமாக ஆற்றுப்படுத்தி, பேரளவாக வெற்றி பெற வைத்தும், அந்த வகைக்கு வெற்றிபெற்றும் வருகிறோம். 

நியுமாராலஜி என்கிற எண்ணியலை நிறைய தமிழர்கள் நடைமுறையில் பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணியல் கலையை வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு என்று தேடிப் போகின்றனர். இந்தக் கலையில் நாம் நுழைய முற்பட்ட உடனேயே-

தமிழ்!
என்னுடைய முதலாவது உடைமை.
என் தாய் தன் குருதியைப் பாலாக்கி என் உடல் வளர்த்தார்.
தன் உயிர்க்காற்றை மொழியாக்கி என்செவிக்கு உணவாக்கி அறிவு தந்தார்.
என்உடலும் என்தமிழும் என் தாய் எனக்குத் தந்த முதல் உடைமைகள்!
அவைகளே எனக்கு அடிப்படை!
அவைகளே எனக்கு ஆதாரம்!
என்று தமிழைத் தரணி போற்றச் செய்ய வேண்டிய நாம்-
நம்முடைய பெயரை ஆங்கிலத்தில் எழுதி அதற்கான எண் கண்டு பிடித்து அந்த எண் நமது பிறந்த ஆங்கிலத் தேதிக்குப் பொருந்த வில்லையென்று- 
இன்று தமிழர் ஆண்டு கணக்குப்படி நாள்: 32,ஆனி, தமிழ்த்தொடராண்டு5127. என்கிற 5127 ஆண்டு கால வரலாற்றையும் தொலைத்து-

பிறந்ததிலிருந்து இன்று வரை, நம் பழந்தமிழர் விசும்பு என்று அழைத்தப் பேரறிவுப் பேராற்றல் அண்டப் பெருவெளியில் பல்லாயிரக் கணக்கான முறை ஒலித்துப் பதிந்து நமது இயக்கப் போக்கை வழிநடத்துகிற நமது பெயரைச் சிதைத்து அல்லது முழுமையாக மாற்றி உறுதியான முன்னேற்றத்தை அடைய வாய்ப்பிருப்பதாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தமிழர் இந்த வகை முயற்சியில் பிழை இருக்கிறது என்பதற்காக அவர்தம் முன்னேற்றத்திற்கான முயற்சிக்கே தடை போடுவது தவறு; மிக மிக தவறு.

என்ன செய்ய வேண்டும்? அதை விட சிறந்த, செப்பனிடப் பட்ட, தமிழர் எந்த அடிப்படைகளையும் இழக்காத மாற்று வழியைக் காட்ட வேண்டும்!

அதற்கான நெடுங்கால முயற்சியில் நான் மீட்டு நிறுவியுள்ள தமிழ்முன்னோர் முன்னெடுத்திருந்த நான்காவது முன்னேற்றக்கலை கணியம். 

காப்பியம், இலக்கியம், நிமித்தகம், கணியம், மந்திரம். இவை ஒன்றுக்குப் பின் ஒன்றாக நம் பழந்தமிழரால் இயல்கணக்கு என்கிற தலைப்பில் தோற்றுவிக்கப் பட்ட ஐந்து முன்னேற்றக் கலைகள்.

நிமித்தம்- என்றால், 'காலம்சார்ந்த' என்று பொருள். நிமித்தகம் என்பது காலம்சார்ந்த முன்னேற்றக் கலை. ஆக நிமித்தகம் என்கிற கலை தோற்றுவிக்கப் படுவதற்கு- 

காலம் குறித்த, பார்வை-தெளிவு-முழமையானவரையறை நிறைவு படுத்தப் பட்டிருக்க வேண்டும். காலத்திற்கு அடிப்படையான கோள்களை யுணர்ந்து,

தற்பரை-விநாழிகை-நாழிகை-பகல்இரவு-நாள்-கிழமை-மாதம்-பருவம்-ஆண்டு-ஆண்டின் சுழற்கணக்கு தொடர்கணக்கு என்பனவெல்லாம் நிறைவு படுத்தப் பட்டிருக்க வேண்டும்.

நிறைவு செய்யப் பட்டது. 60தற்பரைஒருவிநாழிகை, 60விநாழிகைஒருநாழிகை, பகல்30இரவு30-60நாழிகைஒருநாள்; ஏழுநாள்ஒருகிழமை

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதியம் வியாழம் வெள்ளி கருக்கரிவாள் என்கிற கிழமைக்குரிய ஏழுநாட்களுக்கு ஏழுபெயர்கள்.

பனிரென்டுமாதங்கள், ஆறுபருவங்கள்;, 15தற்பரை 31விநாழிகை 15நாழிகை 365நாள் கெண்டது ஓர் ஆண்டு யென்று காலத்தை நிறைவு செய்தனர் நம் தமிழ்முன்னோர்.

இதுவரை நாம் விவரித்தது காலம். காலம் சார்ந்தது அல்லவா நிமித்தகக்கலை? இத்துடன் பிறந்த நேரம் அதையொட்டி நிகழப் போகும் இடர்சோதிப்பதற்கான சாதகக் குறிப்புகள் உள்ளடங்கியது. நிமித்தகக் கலை எனும் காலம் சார்ந்த இந்தப் பகுதியை ஜாதகம் ஜோஸ்யம் என்று முழுமையாகச் சமஸ்கிருதப்படுத்தி, தங்கள் கலையாகவே தலையில் வைத்துக் கொண்டாடி வருகின்றனர் பிராமணர்கள். கணியக்கலையின் பேரளவு பகுதிகளை ஆங்கிலப்படுத்தி நியுமராலஜி என்று தங்கள் கலையாகவே தலையில் வைத்து ஆங்கிலேயர் கொண்டாடி இருப்பதைப் போல.

நிமித்தகம், கணியம் என்கிற இரண்டு முன்னேற்றக் கலைகளில் நிமித்தகத்தைப் பல ஆயிரம் ஆண்டுகளாக பிராமணிய வடிவத்திலும், கணியத்தை சில நூற்றாண்டுகளாக ஆங்கிலேயே வடிவத்திலும் பயன்படுத்தி வருகிற காரணம் பற்றி, நமக்குச் சொந்தமான கடவுள் இடத்தை அயலவர்களுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு அதற்கு நாம் வாடகை கொடுத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறோம்.

நம்பிள்ளைகளுக்கு பெயர் சூட்டும் முன்னெடுப்பில், சமஸ்கிருதப் பெயர்களையும், ஆங்கில ஒலிப்புக்கு உரிய பெயர்களையும் வைத்து நமது பிள்ளைகளுக்கான சொந்த வீடு மற்றும் மனை வாய்ப்பை சிக்கலாக்கி வருகிறோம். 

சில ஆயிரம் ஆண்டுகளாகவும், நடப்பிலும் மிகப்பேரளவான தமிழ்மக்கள் சாதக அடிப்படையில் பெயர் சூட்ட நாள் மீன்களுக்கு உரிய எழுத்தை சமஸ்கிருதமயமாக்கப்பட்ட நிமித்தக அடிப்படையில் தேடுவதால் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சமஸ்கிருதப் பெயர் சூட்டும் அவலம் நிகழ்ந்து வருகிறது. 

தமிழ்மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு- தமிழ்ப்பெயர்களையே தெரிவு செய்யும் நோக்க வகையான தமிழ்ச்சாதக அடிப்படையில் குழந்தைகளுக்குப் பெயர்சூட்ட தமிழ்முன்னோர் முன்னெடுத்திருந்த வகைமையை விரிவாக ஆற்றுப்படுத்துவோம்.

தமிழ்முன்னோர், முத்தமிழில் மூன்றாவது தமிழான இயற்றமிழில், முன்னெடுத்த மூன்றாவது முன்னேற்றக்கலை நிமித்தகம் என்கிற காலக்கலை ஆகும். இதில் இயல்அறிவு (சயின்ஸ்) சார்ந்த பகுதிகள் வானியல் என்ற தலைப்பில் தொடரப்பட்டு வருகிறது. இதில் இயல்கணிப்பு சார்ந்த பகுதியில் சாதகம், சோதிடம் என்கிற இரண்டு தொகுதிகள் உண்டு. சாதகம் என்பது நீங்கள் பிறந்த நேரத்தில் எந்தெந்த ஓரைகளில் கோள்கள் இருந்தன என்பதை எழுதி வைத்துக்கொள்வதாகும். சோதிடம் என்பது அன்றன்றைக்கு உங்களுக்கு வாய்ப்பான பலன்களை தெரி விப்பது ஆகும்.

உங்களுக்கு சாதக அடிப்படையில் பெயர் வைப்பதற்கு மேழம், விடை, ஆடவை. கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை. சுறவம், கும்பம், மீனம் எனப் பனிரெண்டு ஒரைகளுக்கு, அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்கிற பனிரெண்டு உயிரெழுத்துக்களை நிரவிட வேண்டும்.

எல்லா உயிர் மெய்யெழுத்துக்களும் மொழிக்கு முதலாக அமையும் என்பதான க, ச, த, ந, ப, ம என்கிற ஆறு எழுத்துக்களை 27 நாள் மீன்களுக்கு மீண்டும் மீண்டும் சுழன்று வருமாறு அமைக்க வேண்டும்.

அடுத்ததாக ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே. மொழிக்கு முதலாக அமையும் என்பதான நிலையில் அந்த ஞ, ய, வ என்கிற மூன்று எழுத்துக்களை 27 நாள் மீன்களுக்கு மீண்டும் மீண்டும் சுழன்று வருமாறு நிரவிட வேண்டும்.

01. புரவி (அசுவினி) நாள் மீனில் பிறந்த குழந்தைகளுக்குப் பெயர் சூட்ட, பெயரில் முதலாவதாக அமைய வேண்டிய எழுத்துக்கள்: அ. க வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், ஞ வரிசையில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

02. அடுப்பு (பரணி) நாள் மீனில் பிறந்த குழந்தைகளுக்குப் பெயர் சூட்ட, பெயரில் முதலாவதாக அமைய வேண்டிய எழுத்துக்கள்: அ. ச வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், ய வரிசையில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

03. ஆரல் (கார்த்திகை) நாள் மீனில் பிறந்த குழந்தைகளுக்குப் பெயர் சூட்ட, பெயரில் முதலாவதாக அமைய வேண்டிய எழுத்துக்கள்: அ, ஆ, த வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், வ வரிசையில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

04. சக்கரம் (ரோகிணி) ஆ. ந வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், ஞ வரிசை யில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

05. மான்தலை (மிருகசீரிடம்) ஆ, இ. ப வரிசை யில் பனிரெண்டு உயிர் மெய்கள், ய வரிசை யில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

06. மூதிரை (திருவாதிரை) இ. ம வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், வ வரிசை யில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

07. கழை (புனர்பூசம்) இ. உ. க வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், ஞ வரிசை யில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

08. காற்குளம் (பூசம்) உ. ச வரிசையில் பனி ரெண்டு உயிர் மெய்கள். ய வரிசையில் பெய ரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக் கள்

09. கட்செவி (ஆயில்யம்) உ, த வரிசையில் பனி ரெண்டு உயிர் மெய்கள், வ வரிசையில் பெய ரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக் கள்.

10. கொடுநுகம் (மகம்) ஊ, ந வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், ஞ வரிசை யில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

11. கணை (பூரம்) ஊ, ப வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், ய வரிசையில் பெயரில் முத லாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

12. உத்தரம் (உத்திரம்) ஊ, எ, ம வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள். வ வரிசை யில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

13. கை (அஸ்தம்) எ. க வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், ஞ வரிசையில் பெயரில் முத லாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

14. செயில் அறுவை (சித்திரை) எ, ஏ, ச வரிசையில் பனி ரெண்டு உயிர் மெய்கள், ய வரிசையில் பெய ரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக் கள்.

15. விளக்கு (சுவாதி) ஏ. த வரிசையில் பனி ரெண்டு உயிர் மெய்கள், வ வரிசையில் பெய ரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக் கள்

16. முறம் (விசாகம்) ஏ. ஐ. ந வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், ஞ வரிசை யில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

17. பனை (அனுசம்) ஐ, ப வரிசையில் பனி ரெண்டு உயிர் மெய்கள், ய வரிசையில் பெய ரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக் கள்

18. துளங்கொளி (கேட்டை) ஐ, ம வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், வ வரிசை யில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

19. குருகு (மூலம்) ஒ, க வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், ஞ வரிசையில் பெயரில் முத லாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

20. (பூராடம்) ஒ, ச வரிசையில் பனி ரெண்டு உயிர் மெய்கள், ய வரிசையில் பெய ரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக் கள்.

21. கடைக்குளம் (உத்திராடம்) ஒ, ஓ, த வரிசை யில் பனிரெண்டு உயிர் மெய்கள், வ வரிசையில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

22. முக்கோல் (திருவோணம்) ஓ. ந வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், ஞ வரிசை யில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

23. காக்கை (அவிட்டம்) ஓ. ஒள ப வரிசை யில் பனிரெண்டு உயிர் மெய்கள், ய வரிசை யில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

24. செக்கு (சதயம்) ஒள ம வரிசையில் பனி ரெண்டு உயிர் மெய்கள், வ வரிசையில் பெய ரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக் கள்.

25. நாழி (பூரட்டாதி) ஒள, அ. க வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், ஞ வரிசை யில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்.

26. முரசு (உத்திரட்டாதி) அ, ச வரிசையில் பனி ரெண்டு உயிர் மெய்கள். ய வரிசையில் பெய ரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக் கள்

27. தோணி (ரேவதி) அ, த வரிசையில் பனிரெண்டு உயிர் மெய்கள், வ வரிசையில் பெயரில் முதலாவதாக வரலாம் என்கிற எழுத்துக்கள்

இனி உங்கள் பிள்ளைகளுக்கு தமிழ்ப்பெயரை மட்டுமே சூட்டி அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சொந்தவீடு மற்றும் மனையை உறுதி செய்யுங்கள்.

சாதக அடிப்படையில் பெயர்சூட்ட, ஆயிரக்கணக்கான தமிழ்ப்பெயர்களைக் கொண்ட மின்னூல், அமேசான் கிண்டிலில் விலைக்குக் கிடைக்கும். புதிய உறுப்பினர்களுக்குக் கட்டணம் இன்றி படிக்கும் வாய்ப்பையும் அமேசான் கிண்டில் வழங்குகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.