Show all

தூரத்துச்சொந்தம் புலனக் குழுவிற்கு நான் வழங்கிய வாழ்த்துரை

09,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5127: 

முந்தை ஏழுபிறப்புகளைக் கொண்டாடி பிந்தை ஏழேழு பிறப்புகளில் தொடர் முன்னேற்ற வாழ்க்கை வாழ்ந்திருந்த தமிழனத்திற்குச் சொந்தக்காரர்கள் நாம்.

முந்தை ஏழு பிறப்புச் சொந்தங்கள் அனைவரையுமே குலதெய்வங்களாகக் கொண்டாடி அவர்களின் மாண்புகளைப் பேரளவுகளாகப் பெற்று வாழ்ந்து செழித்திருந்த இனம் தமிழினம்.

நடப்பில்- 
குலதெய்வம் என்கிற தலைப்பில் ஏதொவொரு ஒற்றை முன்னோரை- 
காரணம் அறியமாட்டாமல்- 
இடுகுறியாக கொண்டாடி- 
கொஞ்சமாக முன்னேற்றத்தைப் பெறுகிற இடத்திற்கு வந்திருக்கிறது தமிழினம்.

அதற்குக் காரணம்:
பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், உலகமதங்கள், மார்க்சியம் ஆகிய அயல் இயல்களுக்கும், அந்த இனங்களின் மொழிகளான சமஸ்கிருதம், ஹிந்தி, உருது, ஆங்கிலம், உள்ளிட்ட மொழிகளுக்கும், நமது அனைத்து உடைமைகளையும் ஒப்படைத்துவிட்டு, கொத்தடிமைகளாக, சில ஆயிரம் ஆண்டுகளாகவும், நடப்பிலும் பிழைப்பாற்றி வருவதே ஆகும்.

அம்மா அப்பா, பாட்டி தாத்தா, பூட்டி பூட்டன், ஓட்டி ஓட்டன், சேயோள் சேயோன், பரை பரன் என்கிற முந்தை ஏழு பிறப்புகளில் பேரளவினரைக் கொண்டாடும் வகைக்கு நமது மாண்புகள்பெருகி, சிறப்பான வளர்ச்சியைப் பெறுவோம் என்பது தமிழ்முன்னோர் நிறுவிய உண்மையும் பாடாற்றியிருந்த வாழ்க்கை முறையும் ஆகும்.
அதே போன்ற ஒரு முன்னெடுப்பாக, தூரத்துச் சொந்தங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில், ‘தூரத்துச்சொந்தம்’ என்கிற புலனக்குழு (வாட்ஸ்ஆப் குருப்) உருவாக்கி குலதெய்வகளின் மாண்புகளைத் திரட்டும் முயற்சியில் களம் இறங்கியுள்ள- 

என்பெற்றோர்
பொன்னம்மாள் ருக்மாங்கதன் இணையரின், 
முதலாவது பிறப்புகளில் ஒன்றான தர்மாங்கதன் காவேரியை தொடர்ந்து, 
இரண்டாவது பிறப்புகளில் ஒன்றான தேன்மொழி வடிவேல் இணையரில் முன்னெடுத்த, 
மூன்றாவது பிறப்பில் இரண்டாவதான சரவணனை வாழ்த்தி மகிழ்கிறேன்.

சரவணன் ஒருங்கினைக்கும் தூரத்துச் சொந்தங்கள் அனைவருக்கும் பூட்டன் வரையிலுமான, 
குலமுன்னோன். குமரிநாடன்,
தமிழறிஞர், மந்திரம்கல்வியாளர். 
எனதுஇந்த, பேரச்சொந்தங்களுக்கான முன்னேற்றவாழ்த்தின், விரிவான விளக்கத்தை, இந்த இரண்டு கட்டுரைகள் தெளிவு படுத்தும்.

1. மறுபிறப்பு

2. கொண்டாடுவோம்! முந்தை எழுபிறப்பை. எட்டுவோம் உச்சம்! பிந்தை எழுபிறப்பில்

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.