Show all

எல்லையில்லாத முன்னேற்றத்திற்கு! மனதை மாண்புகளிள் பதிப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்

'எல்லையில்லாத முன்னேற்றத்திற்கு, மனதை மாண்புகளின் பதிப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்' என்பது, இயல்கணக்கின் 1.இலக்கியம் 2.காப்பியம் 3.சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகம் 4.கணியம் 5.மந்திரம் எனும் ஐந்து அரும்பெரும் படியேற்றத்தில் தமிழ்முன்னோருக்குக் கிடைத்த ஆகச்சிறந்த பொன்மொழி ஆகும். அந்தப் பொன்மொழியை விளக்கித் தெளிவுபடுத்தும் நோக்கத்திற்கானது இந்தக் கட்டுரை.

07,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5126: 

மனம் அல்லது மூளை என்கிற உறுப்புக்கு, ஆழ்மனம், வெளிமனம், மனப்பிறழ்வு, மனஅழுத்தம், உளவியல், நுண்ணறிவுஈவு அல்லது நுண்ணறிவுஎண் (ஐகியு) நீட் மாதிரியான நுழைவுத் தேர்வுக்கான அடிப்படை என்கிற எந்த ஒன்றும் சொந்தமாக இருப்பதாக நிறுவ முடியாது. அப்படிப் பேசப்பட்டுக்கொண்டிருக்கிற அனைத்தும் 'ஒற்றை முதலாளித்துவப் போட்டி' யாளர்களின் வருமானத்திற்கான சந்தையும் அதற்கான கருத்துப் பரப்புதல்களுமே ஆகும்.

கடவுளைப் போலவே, மனித மனத்திற்கும் சொந்தமான ஆற்றல் என்று எதுவும் கிடையாது. மெய், வாய், மூக்கு, கண், காது என்கிற ஐம்புலன்களின், அறிதல் தரவுகளைப் பெற்றுக்கொண்டு, அதற்கு அந்த ஐம்புலன்கள் ஆற்றவேண்டிய பாடுகளை முயக்குவது மனதின் வேலையாகும்.

உடல் நலத்தைப் பேணினால், மனம் என்கிற உறுப்பின் நலமும் சிறப்பாகவே அமையும்.

சிலரால் முடியும், பலரால் இது முடியாது என்கிற எந்த: 
1.செயலும் இல்லை. 
2.சிந்தனையும் இல்லை. 
3.அறிவும் இல்லை.

ஆகவே, நடப்பு சமூகம் பேணிக்காக்கிற எந்த தகுதிப்பாட்டு ஏற்றதாழ்வும், மனம் அல்லது மூளை என்கிற உறுப்பு சார்ந்ததோ, இயல்பானதோ, இயற்கையானதோ அன்று.

மனதில் எவ்வளவு தகவல்களை வேண்டுமானாலும் குவிக்க முடியும். அப்படிக் குவிக்கப்பட்ட நிலையில், மனம் ஒரு தகவல் களஞ்சியம் ஆகிறது. 

மனம் என்கிற மூளையில் எப்போதும் சிக்கல் இல்லை. அப்படி சிக்கல் இருந்தால் அது ஒரு நோய்கூட அன்று, அது ஒரு குறைபாடு.

சிக்கல்: 
1. உடலுழைப்புக்கூலி, நிருவாகக்கூலி, வாடகை வீடு, அயல்மொழி வழிக்கல்வி, அயல்மொழியில் பெயர், அயல்அடிப்படையில் வழிபாடு, அயலவனின் ஆட்சி அதிகாரம், அயல் உணவுக்கலாச்சாரம், இப்படியான, அயல் வாழ்மானத்தைப் பிழைப்பாக்கி கொள்வது. 

இதில் உங்கள் சொந்த உழைப்பும், சொந்த இனத்தின் உழைப்பும், சொந்த மொழியின் வீழ்ச்சியும், சொந்த குடும்பத்தில் குழப்பமும், சொந்த உடைமைகளின் பறிப்பும் பேரளவாக நடந்துவிடும்.

உங்கள் பெயரை அயல்மொழியில் அமைத்துக் கொள்வதால் அந்த மொழியினத்திற்கு ஒரு புலமைத்தொகையை உங்கள் சொந்த உழைப்பில் இருந்து இயல்பூக்கமாக எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருக்கும் கடவுள். அந்த மொழியினத்தால் நீங்கள் பெறுகிற ஆதாயம் சுழியமே.

நீங்கள் ஆங்கிலவழிக் கல்வி பெறுவதால், ஒன்றியப் பாடத்திட்டத்தில் ஹிந்தி மொழி கற்பதால் நீங்கள் அடையப்போவதாக கருதுகிற ஆதாயங்கள் அந்த மண்ணின் மக்கள் உழைப்பில் இருந்து- உங்களுக்கு மனிதஇனத்தாலோ, கடவுளாலோ பகிர்ந்தளிக்கப்படுவது இல்லை. மாறாக, உங்கள் மண்ணின் மக்களிடம் இருந்தே ஆதிக்க அடாவடியாக பறித்து உங்களுக்கு அதில் மிகமிக குறைந்த விழுக்காடு மட்டும் திருப்பப்படுகிறது. 

உங்களுக்கு பகிரப்படுகிற உரிமை உண்மையானதோ, உறுதியானதே இல்லை. என்றைக்கு வேண்டுமனாலும் குறைக்கப்படலாம், நிறுத்தப்படலாம், கொடுத்தது பறிக்கவும் படலாம்.

அந்த உரிமைத் தகுதிக்கு நீங்கள் படித்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பிறமொழிச்சொற்கள், பிறமொழி கருத்துக்கள், பிறமொழி இயல்கள் ஆகியவற்றுக்கு அந்த மொழியினத்திற்கு ஒரு புலமைத்தொகையை உங்கள் சொந்த உழைப்பில் இருந்து இயல்பூக்கமாக எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருக்கும் கடவுள்.

2. தான் ஒப்புக்கொடுத்தால், மற்றவர்கள், தன்னை உறுதியாக பாதிக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ளாமல், அவர்களாக வலிந்து வந்து தன்னைப் பாதிப்பதாகக் கருதுவதால்- அவர்களிடம் இருந்து விலகுவதே தீர்வு என்று புரியாமல், அவர்களைக் குற்றப்படுத்திப் புலம்புவது. 

எனக்கு இப்படித்தான் நடக்கும் என்று உங்கள் வாழ்க்கையைப் பற்றிய பிழையான ஒரு கணிப்பை நீங்களே உருவாக்கிக் கொண்டு அந்தக் கணிப்பையே கடவுள் கேட்பாக்கி, உங்கள் சொந்த உழைப்பை, சொந்த இனத்தின் உழைப்பை, சொந்த மொழியின் வீழ்ச்சியை, சொந்த குடும்பத்தில் குழப்பத்தை, சொந்த உடைமைகளின் பறிப்பை நீங்களே கடவுளிடம் கேட்டுப் பெறுகின்றீர்கள். 

இந்தவகை சிக்கலுக்கான தீர்வு: 
தனது மனம் என்கிற தகவல் களஞ்சியத்தில் உடைமைப்பாட்டுக்கான சொந்தமொழி, சொந்தமொழி வளர்ச்சியைப் பேணியிருப்பதும், சொந்த மொழிச் சொற்களான- உடைமை, கட்டுமானம், செயல்பாடு, ஆக்கம், அறிதல், புரிதல், வெற்றி, புகழ், வளர்ச்சி, மேம்பாடு, முன்னேற்றம், அன்பு, ஆசை, கேட்டல், கொடுத்தல் என்பதான மாண்பு சொற்களை எழுதியிருப்பதும் பேசியிருப்பதும், பேரளவு உடைமைகள் குவிப்பதும், தன்னுடைய இன்ப நினைவுகள் என்கிற மாண்புகளை அடிக்கடி பேசியும் எழுதியும் வருவதும், நம் குடும்ப உறுப்பினர்கள், நமக்கான தொடர்பினர் அனைவரின் மாண்புகளைக் கொண்டாடி இருப்பதும் ஆகும்.

இந்தப்பாடுகள் கடவுளில் பதிவாகி, உங்கள் அனைத்து முயற்சியிலும் வெற்றியையும், பேரளவு உடைமைகளையும், உங்கள் உடமைகளால் உங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கான பாதுகாப்பையும் கடவுள் உங்களுக்கு ஒருங்கிணைத்துத் தர வாய்ப்பாகும்.

நடப்பில், உழைப்பாதாயம் பணமாக மதிக்கப்படுவதால், எவ்வளவு பணமும் யாரும் குவிக்கலாம் என்பதே நூறு விழுக்காடு சரி.

ஆனால், பணத்தின் மீதான தீண்டாமை சமூகச் சட்டங்களாகவும், கருத்துப்பரப்புதல்களாகவும், பொதுவுடைமை போன்ற இயல்களாகவும் கூட பேணப்பட்டு சமூக ஏற்றதாழ்வுக்கு அதுவே காரணம் ஆக்கப்பட்டு வருகிறது. 

ஆனால் ஒற்றை முதலாளித்துவம் என்பது நூறுவிழுக்காடு பிழை. இயற்கை இரண்டின் அடிப்படை ஆனது என்கிற நிலையில் இருவேறு உலகத்து இயற்கையே. ஒற்றை முதலாளித்துவம், ஒற்றை அதிகாரம், ஒற்றைமதம், ஒற்றைமொழி போன்ற பிழைப்பாட்டிற்கு இதே அமைப்புகள் பேரளவாக பாடாற்றி வருகின்றன. 

மாண்புகளைக் குவிக்க வேண்டிய மனதிற்கு வருவோம். மனதை ஒரு புத்தகமாக உருவகிக்கலாம். ஆனாலும், நான் பிறந்ததிலிருந்து, கடந்த அறுபத்தி எட்டு ஆண்டுகளாக எனது மனதில், என் மெய், என் வாய், என்; மூக்கு, என் கண், என் காது என்கிற ஐம்புலன்களின் மூலமாக பெற்ற அறிவை உறுதியாக ஒரு புத்தகத்தில் பதிவு செய்ய முடியாது. ஒரு பெரிய நூலகமே தேவைப்படும். 

மனம் ஒரு புத்தகத்தை விட, பல புத்தகங்களின் தொகுப்பு ஆன ஒரு பெரிய நூலகத்தை விட மேம்பட்டது என்பதே உண்மை.

மனத்தை ஒரு கணினியாக, அல்லது மேம்படுத்தப்பட்ட கையடக்கச் செல்பேசியாக உருவகிக்கலாம். ஆனால் ஒரு தகவலை மனத்தில் தேடுகிற வேகத்தில், இன்று வரை நடப்பில் இருக்கிற உலகின் எந்தத் தகவல் தொழில் நுட்பக் கருவியாலும் தேடமுடியாது.

ஆக மனம் போன்ற  ஒரு கருவியை மனிதன் உருவாக்க இன்னும் பல ஆண்டுகள், நம் தொழில்நுட்பம் பயணிக்க வேண்டியிருக்கும். 

நிலா என்கிற ஒரு சொல்லை ஒலித்தவுடன்:

என் அம்மா ஊட்டிய நிலாச்;;சோறு ஒரு பெரும் கதையாக நினைவுக்கு வருகிறது. 

நிலவென்று காட்டிவிட்டாய் ஒளிமுகத்தை என்கிற பாரதிதாசனின் பாடல், அந்தப் பாடலை நண்பர்களோடு பகிர்ந்து மலைத்தது என ஒரு பெரும் கதையாக நினைவுக்கு வருகிறது. 

அன்று வந்ததும் இதே நிலா என்கிற கண்ணதாசனின் திரைபடப்பாடலும், அந்தப் பாடல் இடம்பெற்ற பெரிய இடத்துப் பெண் திரைப்படமும், புரட்சித்தலைவர் அதில் குடுமி வைத்துக் கொண்டு நடித்ததும், அந்தப் படத்தை ஒவ்வொரு முறையும் யார் யாரோடு பார்த்தோம் என்கிற அனைத்தும் ஒரு பெரும் கதையாக நினைவுக்கு வருகிறது. 

என் அக்கா மகளுக்கு அழகான தமிழ்ப் பெயர் சூட்ட வேண்டும் என்கிற ஆர்வத்தில் வெண்ணிலா என்று பெயர் சூட்டியது ஒரு பெரும் கதையாக நினைவுக்கு வருகிறது. 

நான் சோதிடம் படித்தபோது சந்திரன் என்கிற கோளை நிலா என்று பதிவிட்டது ஒரு பெரும் கதையாக நினைவுக்கு வருகிறது. 

எனக்கு என் பெற்றோர் இட்ட பெயர் கூட சந்திரசேகரன்தான் அதை நான் குமரிநாடன் என்று மாற்றிக் கொண்ட வரலாறும் அதில் எனக்கு தமிழ்முன்னோர் நிறுவிய கணியம் என்கிற நான்காவது முன்னேற்றக்கலை கிடைத்ததும், கதையாக மட்டுமல்ல, நெடிய பக்கங்களைக் கொண்ட வரலாறு ஆகும்.

நிலா என்கிற தலைப்பில் என்னால் நூறு பக்கம் கொண்ட புத்தகமே எழுத முடியும்.

நிலா என்கிற ஒற்றைச்சொல் குறித்து என்மனம் இவ்வளவு தரவைத் தாங்கியிருக்கிறது, என்கிறபோது, நான் அறிந்த, பயன் படுத்திய பல ஆயிரம் தமிழ்ச்சொற்களுக்கு மிகப்பேரளவு தரவுகள் அல்லவா என் மனதில் பதிந்திருக்கும்.

இந்தத் தரவுகள் அத்தனையும், உலகின் அனைத்து மனிதருக்கும் பொதுமனமான கடவுளிலும் பதிவாகிறது என்பதை முன்பே நாம் அறிவோம். இந்த வகைமையில், கடவுளில் எனக்கான சொந்தஇடம் அமைகிறது என்பதையும் முந்தைய கட்டுரைகளில் படித்திருக்கிறோம். 

என்சொந்த மொழிக்கும், என் சொந்த மொழியின் வளர்ச்சிக்கும், என் அனைத்து உடைமைகளுக்கும், என் நினைவில் நான் பெற்ற இன்ப நினைவுகளை பேசியும் எழுதியும் பகிர்ந்தும் வருவதற்கும், என் தொடர்பினரின் மாண்புகளை கொண்டாடி இருந்ததற்கும் மட்டுமே, கடவுளில் எனக்கான இடம் கிடைக்கும். உலகில் உள்ள அத்தனை மனிதருக்கும், இதே வகைமையில் இடம் கிடைக்கும்.

என் பெயர் சந்திரசேகரன் என்று அயல்மொழியில்  இருக்குமானால், அதற்கான உரிமத்தொகையாக நான் ஈட்டுகிற வருமானத்தில், நான் அறியாமலே கடவுளால் அந்த மொழியினத்திற்கு வரவு வைக்கப்பட்டுவிடும். 

என்னுடைய வாழ்மானமே அயல் ஒன்றாக இருக்குமானால், அவர்களிடம் இருந்து எனக்குக் கிடைக்கும் வருமானத்தில் என்பெயருக்கானதும் நான், என்பேச்சில், என் எழுத்தில் பயன்படுத்துகிற அயல்மொழிச் சொற்கள் அத்தனைக்கும் உரிய உரிமத் தொகையாக நான் அறியாமலே கடவுளால் அந்த மொழியினத்திற்கு வரவு வைக்கப்பட்டுவிடும்.

அயல் மொழி, அயல் கலாச்சாரங்கள், அயல் கருத்துக்களைக் கொண்;டாடியிருக்கும்போது, அதற்கு என் சொந்த உழைப்பில் இருந்து பேரளவு உரிமைத்தொகையை, நான் அறியாமலே கடவுளால் நான் கொண்டாடும் மொழியினத்திற்கு வரவு வைக்கப்பட்டுவிடும்.

நீங்கள் பயன்படுத்துகிற செல்பேசி, மற்றும் கணினி, உங்கள் மனம் போன்றது மட்டுமன்று. இயற்கையின் பொதுமனமான கடவுள் போன்றதும் என்று அறிந்து கொள்ளுங்கள். 

நீங்கள் உங்கள் செல்பேசியை அல்லது கணினியை எந்த உரிமத் தொகையும் இல்லாமல் பயன்படுத்தி விட முடியாது. 

கணினியில் நாம் அமைக்கும் இணையத்தளத்திற்கு ஆண்டுக்கு, கட்டாயம் செலுத்தும் ஒருபெருந்தொகையிலும், செல்பேசிக்கு, எண்பத்தி நான்கு நாட்களுக்கு என்று, ஏதொவொரு அலைகற்றை நிறுவனத்திற்கு நாம் செலுத்தும் ஒருதொகையும், நாம் பயன்படுத்தும் அனைத்து தரவிலும் எந்தெந்த தனிமனிதன் மற்றும் மொழியினத்தின் உடைமை இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் உரிமத்தொகை பகிரப்படுகிறது.

நான் அன்றாடம் என் சொந்த மொழிச்சொற்களை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும் போதும், எனக்கு என் பெற்றோர் வைத்த சொந்தமொழிப் பெயர் ஒவ்வொரு முறை ஒலிக்கப்படும் போதும், நான் என் உடைமைகளைக் குவிக்கும் போதும், நான் என் குடும்பத்தாரோடு கலந்துரையாடும் போதும், நான் அழகிய தமிழ்ச்சொற்களால் ஐந்திணைக் கோயில் கட்டமைத்த பொருள் பொதிந்த மந்திரத்தை ஒவ்வொரு முறை நான் ஓதும் போதும், கடவுளில் எனக்கான சொந்த இடம் பேணப்படுகிறது. அதனால் கடவுள் எனக்கு பல சொந்த அமைப்புகளை ஒருங்கிணைத்துத் தருகிறது.

மனம் என்கிற தகவல் களஞ்சியத்திற்கு மிகமிக அடிப்படையான தேவை: சொந்த மொழியும் அதன் வளர்ச்சியும். மற்றும் பேரளவு உடைமைகள். இவற்றில் ஒவ்வொரு தமிழனும் சுழியத்தை நோக்கிய இறங்குமுகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறான் பல ஆயிரம் ஆண்டுகளாக.

தமிழன் வடஇந்திய மக்களின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறான். உலகமயமாக்கலில் இருக்கிறான். பலவேறு மதங்களைச் சார்ந்து இருக்கிறான். பலவேறு வழிகாட்டிகளைச் சார்ந்து இருக்கிறான். உடலுழைப்புக் கூலியாக இருக்கிறான். நிருவாகக் கூலியாக இருக்கிறான். இத்தனைத் தளத்திலும் அவனுக்குக் இருப்பது உரிமை. 

ஒரு தமிழனுக்கு அவன் சூட்டிக்கொள்கிற தமிழ்ப்பெயரில் உடைமை இருக்கிறது. அவனது குடும்பத்தில் உடைமை இருக்கிறது. அவன் கட்டும் வீட்டில் உடைமை இருக்கிறது. அவன் தனித்திறனில் உடைமை இருக்கிறது. அவனின் சொந்தத் தொழிலில் உடைமை இருக்கிறது. அவனின் வணிகத்தில் உடைமை இருக்கிறது. அவனின் வேளாண்மையில் உடைமை இருக்கிறது. அவன் வாங்கும் அனைத்துக் கருவிகளிலும்; உடைமை இருக்கிறது. அவன் கண்டுபிடிப்புகளில் உடைமை இருக்கிறது. அவன் கொண்டாடும் இன்ப நினைவுகளில் உடைமை இருக்கிறது. அவனுக்கான குடும்பம் மற்றும் அவனுக்கான சமூகத் தொடர்பினரின் மாண்பு கொண்டாடுதலில் உடைமை இருக்கிறது.

அவன் அமைக்கும் மாடித்தோட்டத்தில்கூட உடைமை இருக்கிறது. அவன் படிக்கும் தமிழ்வழிக் கல்வியில் உடைமை இருக்கிறது. அவன் பேசுகிற ஒவ்வொரு தமிழ்ச்சொல்லிலும் அவன் உடைமை இருக்கிறது. அவன் எழுதும் ஒவ்வொரு தமிழ்ச்சொல்லிலும் உடைமை இருக்கிறது. 

நாம் எழுதும், நாம் எண்ணும், நாம் பேசும் ஒவ்வொரு சொல்லையும் வேறுவேறு வகைமைப்பாட்டில் இருத்தியே கடவுள், நமக்கான உடல்நலம், மனமகிழ்ச்சி, பொருளாதார முன்னேற்றம், பயண உதவி வண்டிகளில் பாதுகாப்பு, பல்வேறுவகையான தொடர்புகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றை வழங்கி வருகிறது (முயக்குகிறது) என்பது இயல்கணக்கின், இறுதியும் உறுதியும் ஆன மந்திரத்தில், தமிழ் முன்னோர் பொதித்துள்ள செய்தியாகும்.

கடவுள் பட்டியலில் சொற்களின் வகைகள்:
1. உடைமைச் சொற்கள்
2. உரிமைச் சொற்கள்
3. குற்றச் சொற்கள்
என மூன்று ஆகும்.

சொந்த மொழியின் சொந்தச் சொற்கள் அனைத்தையும் உடைமைச் சொற்கள் என்கிற பட்டியலில் கடவுள் இருத்துகிறது. உடைமை சொற்கள் அனைத்தும் மனதில் மாண்பை குவிப்பதற்கானவைகள்.

சொந்த மொழி அல்லாத எந்த மொழியின் சொற்களையும் உரிமைச் சொற்கள் என்கிற பட்டியலில் கடவுள் இருத்துகிறது. உரிமைச் சொற்கள் அனைத்துக்கும் நம் சொந்த உழைப்பில் இருந்து ஒரு வாடகையைக் கடவுள் எடுத்து, சொந்த மொழியினத்தினருக்குப் பகிர்ந்து விடும்.

எந்தவொரு சொல்லும் கட்டுமானத்தைக் குறிக்காமல், தடையையோ, பிளவையோ குறிக்குமானால் அந்த ஒவ்வொரு சொல்லையும் குற்றச் சொற்கள் என்கிற பட்டியலில் கடவுள் இருத்துகிறது. நாம் முன்னெடுக்கும் குற்றச்சொற்கள் அனைத்தும் நம் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும், தடையாகவும், தளர்வாகவும் அமையும்.

கட்டுமானத்திற்கான, செய் என்கிற உடைமைச் சொல், செய்யாதே என்கிற தடைக்கான ஆணையில் செய்யாதே என்கிற சொல் குற்றச்சொல் ஆகிறது. உடை என்கிற பிளப்புக்கான ஆணையில் உடை என்கிற சொல் குற்றச்சொல் ஆகிறது.

சிந்தனை என்பது மனத்தில் சேமிக்கப்பட்ட அனைத்து அறிவையும் மீண்டும் மீண்டும் படித்தறிதல் ஆகும். மெய், வாய், மூக்கு, கண், காது என்கிற ஐம்புலன்களின், அறிதல் ஆற்றலில் கிடைக்கப்பெறாத எந்த செய்தியும் உங்கள் சிந்தனை என்கிற படிப்பில் இடம்பெறாது. 

கனவு வருவது. இரவு உறக்கத்தில் உங்கள் மனதில் சேமிக்கப்பட்ட நீங்கள் படித்திராத அறிவை படித்தறிதல் ஆகும். 

இயக்கம் இல்லாத சாலை, அதில் இயங்கும் பேரளவு மாண்புகளைக் கொண்ட சொகுசுந்தை சிறப்பான பயணத்திற்கு முயக்குகிறது என்பதை யாரும் அறிவோம். இதில் பேரளவு மாண்பே பயணத்தின் சிறப்பு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

நம் செயலும், நம் எண்ணமும், நமது பேச்சின் ஒவ்வொரு சொல்லும் கடவுளை இயக்க, அந்த வகைக்கே கடவுள் நம்மை முயக்குகிறது என்பதை கடவுள் கட்டுரையில் மிகத்தெளிவாக புரிந்துகொண்டுள்ளோம்.  

நாம் சொகுசுந்து என்றால், நாம் பயணிக்கிற சாலை கடவுள் என்பதையும், நமது சிறப்பான வாழ்க்கைக்கு நம் செயலும், நம் எண்ணமும், நமது பேச்சின் ஒவ்வொரு சொல்லும் மாண்புகளைப் பேண வேண்டும் என்பதையும் சலையில் சொகுசுந்து பயணத்தோடு, கடவுளில் நமது வாழ்க்கைப்பயணம் என்பதைப் பொருத்தி புரிந்து கொள்ளலாம் அல்லவா? 

முத்தமிழில் மூன்றாவது தமிழான, இயற்றமிழின் இருபெரும் பிரிவுகள்: 1. இயல்அறிவு (சயின்ஸ்). 2. உலகினர் இன்று வரை கொண்டிராததும், முயலாததும் ஆன துறையான இயல்கணக்கு. 

அந்த இயல்கணக்கில் தமிழ்முன்னோர் கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுத்தி உருவாக்கிய ஐந்து முன்னேற்றக்கலைகள்: 1. இலக்கியம். 2. காப்பியம். 3. சோதிடம் சாதகம் உள்ளிட்ட நிமித்தகம். 4. கணியம். 5. மந்திரம்.

ஐந்தாவது முன்னேற்றக்கலையான மந்திரம் என்கிற சொல்லில், 'நாம் சிறப்பான வாழ்க்கை பெற, நமது இயக்கத்திற்கு ஏற்ப நம்மை முயக்கும் கடவுளை இயக்க, பேரளவு மாண்புகளை நம் மனதில் குவித்திருக்க வேண்டும்' என்கிற பொருளை பொதித்துள்ளனர். அதன் விளக்கமாக மனதிற்கும் கடவுளுக்குமான தொடர்பை தெளிவு படுத்துவதற்கானதே மந்திரம் என்கிற முழுக்கலையும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,290.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.