Show all

ரஜினி மன்ற மாநிலச் செயலாளராக பொறுப்பேற்க, லைகா செயல் அதிகாரி, லைகாவிலிருந்து விலகினார்

03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: முதற் கட்டமாக மாவட்ட வாரியாக தனது மன்றங்களுக்கு நிர்வாகிகளை நியமித்துள்ள ரஜினி விரைவில் கட்சி பெயர் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளராக ராஜு மகாலிங்கத்தை நியமித்து ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ராஜு மகாலிங்கம் லைகா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தவர். 0.2படத்தில் பணியாற்றியபோது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் மக்கள் மன்றத்தில் சேரும் அளவுக்கு நெருக்கமானது. இதனால் லைகா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பணியிலிருந்து அவர் விலகி விட்டது குறிப்பிடத்தக்கது. விலகலுக்குப் பிறகு மாநிலம் முழுவதும் மன்ற நிர்வாகிகளைச் சந்திப்பதற்காக ராஜு மகாலிங்கத்தை அனுப்பி வைத்த நிலையில் தற்போது மன்றத்தில் முக்கியப் பதவியை அவருக்கு ரஜினி அளித்துள்ளார். முன்னதாக இன்று ரஜினிகாந்தை தமிழருவி மணியன் சந்தித்து பேசினார். அப்போது இது வழக்கமான சந்திப்புதான் எனத் தமிழருவி மணியன் தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,699

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.