Show all

எச்.ராஜா மீதான புகாரை, தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது சென்னை உயர் அறங்கூற்றுமன்றம்

02,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுக்கோட்டை திருமயம் பகுதியில், விநாயகர் ஊர்வலம் நடத்த அனுமதி தொடர்பாக, அறங்கூற்றுத்துறை மற்றும் காவல்துறையை, எச்.ராஜா விமர்சனம் செய்யும் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

உயர்அறங்கூற்றுமன்றமே தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என நீதிபதி குலுவாடி ரமேஷிடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த குலுவாடி ரமேஷ், இதுதொடர்பாக மனுவாக பதிகை செய்யுமாறு அறிவுறுத்தினார்.

இதையடுத்து, அறங்கூற்றுவர்கள் செல்வம், நிர்மல் குமார் அடங்கிய அமர்வு முன்பு,  இதே கோரிக்கையை வழக்கறிஞர்கள் முன்வைத்தனர். இதையடுத்து எச்.ராஜா மீதான புகாரை, தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற அறங்;கூற்றுவர்கள், நான்கு கிழமைக்குள், அறங்கூற்றுமன்றத்தில் நேரில் அணியமாகி விளக்கமளிக்க வேண்டும் என எச். ராஜாவுக்கு உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவில், நியாயத் தீர்ப்பு வழங்குவதில் அறங்கூற்றுவர்கள் தாம் அச்சாணி என உணர்ந்து, கண்ணியத்தை காப்பது அறங்கூற்றுவர்களின் தலையாய கடமை என குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜனநாயகத்தின் தூணான அறங்கூற்றுத்துறையை  களங்கப்படுத்த முயற்சிப்பதை அனுமதிப்பது என்பது பாஸிசத்தையும், நக்ஸலிசத்தையும் வளர்ப்பதாகவே அமையும் என்றும் அறங்;;;கூற்றுவர்கள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர். 

எனவே தான், எச். ராஜாவுக்கு எதிராக தானாக முன் வந்து அறங்கூற்றுமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்ததாக, அறங்கூற்றுவர்கள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,914.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.