Show all

ஆய்வுக் கோணத்தில்! நேற்றைய இராகுலின் பேச்சும்- இன்றைய மோடியின் பேச்சும்

நேற்றும் இன்றும், இராகுலும் மோடியும் தமிழகம் வந்து பேசியதில் இருந்து சில அம்சங்கள்

30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேற்று தமிழகம் வந்த இராகுல் பேச்சில் இருந்த சில சிறப்பு அம்சங்கள்:

1. நீட் தேர்வால் இன்னொரு அனிதா இறப்பதை விரும்பவில்லை.

2. அதிமுகவைக் கட்டுப்படுத்துவது போல் தமிழகத்தை கட்டுப்படுத்த நினைக்கும் மோடியின் கனவு பலிக்காது.

3. மோடி பெரியார், கலைஞர் புத்தகங்களைப் படித்து தமிழக வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும் ; நானே பரிசளிக்கிறேன்.

4. மோடி சொன்ன அனைவருக்கும் 15இலட்சம் கொடுக்கப் படவில்லை. கொடுக்கவும் முடியாது. நாங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஐந்து கோடி குடும்பங்களுக்கு மட்டும் ஆண்டுக்கு 72000 தருவோம் ; தரமுடியும்.

5. தமிழ்நாட்டை நாக்பூரில் இருந்து ஆள நினைக்கிறது பாஜக ; ஆனால் காங்கிரஸ் கட்சியோ, தமிழகத்தை தமிழர்கள்தான் ஆள வேண்டும் என்று கருதுகிறது

6. கடனை செலுத்த முடியாத வேளாண்பெரு மக்களை கைது செய்வதை சட்டவிரோதம் ஆக்குவோம்.

இன்று தமிழகம் வந்துள்ள மோடியின் பேச்சு தேர்வுக்கு தயார் செய்கிற மாணவனின் கட்டுரை போல் இருந்ததேயன்றி சிறப்பான அம்சங்கள் எதுவும் வெளிப்படாதது ஏமாற்றமே.

பாஜக இந்தியாவிற்கு காவலாளியாக இருக்கும். காங்கிரசைப் போல, திமுகவைப் போல வாரிசு அரசியல் பாஜகவில் இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 60 ஆண்டுகளும் மக்களுக்கு செய்தது அநியாயமும், அநீதியும்தான். புதிய இந்தியாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். திருடர்களையும், திருட்டுத் தனத்தையும் செய்யும் எதிர்கட்சிகளைப் பிடிக்கும் காவலாளி நான். இராகுல் தலைமைஅமைச்சர் என்று ஸ்டாலின் முன்மொழிந்ததை அவரின் நண்பர்களே விரும்பவில்லை. எம்ஜியார் செயலலிதாவால் இந்தியா பெருமை கொள்கிறது. போன்ற தகவல்கள் மோடியின் பேச்சில் இடம் பெற்றிருந்தன. முதன்மையான ஒன்று மறந்து விட்டதே. தமிழக மக்களுக்கு நாளை பிறக்கவிருக்கிற தமிழ்ப் புத்தாண்டுக்கு வாழ்த்து சொன்னார்.

திருமண விழாவில் சாப்பிடுவதற்காக வழிப்போக்கர் வந்து சாப்பிட்டு விட்டு வாழத்துச் சொல்லி விட்டுப் போவார்களே அப்படியிருந்தது வலிமை மிக்க இந்தியாவிற்கே தலைமை அமைச்சராக இருக்கிறவரின் பேச்சு.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,121.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.