Show all

யாவர் அந்த பாஜக வேட்பாளர் ஐவர்!

09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் இரண்டு நாட்களாக மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளதை அடுத்து தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. 

எதிர்பார்த்தவாறே அமைந்திருக்கிறது அதிமுக கூட்டணி. தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

அடிமாட்டு பேரத்திற்கு தங்களுக்கு அடிமைகள் கிடைத்துவிட்ட உற்சாகத்தில் உள்ள தமிழக பாஜக, தங்களுக்கான  5 தொகுதிகள் எவை? அதற்கான வேட்பாளர்கள் யார்? என்பதை தேர்வு செய்யும் பணியை தொடங்கி உள்ளது. 

அந்த வகையில், தற்போதைய நிலவரப்படி பாஜகவின் 5 தொகுதிகளும், 5 வேட்பாளர்கள் பட்டியலும்:

1. திருச்சி:  தமிழிசை சௌந்தரராஜன்

2. கன்னியாகுமாரி: பொன்.ராதாகிருஷ்ணன்

3. திருநெல்வேலி: நைனார் நாகேந்திரன்

4. கோவை: - சி.பி ராதாகிருஷ்ணன்

5. திருப்பூர்: வானதி சீனிவாசன்

இதில், கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி வேட்பாளர்களில் மாற்றம் இருப்பதற்கான வாய்ப்பு குறைவு. திருச்சி தொகுதியை கைப்பற்ற கருப்பு முருகானந்தமும், திருப்பூர் தொகுதியை தன்வசமாக்க ஹெச்.ராஜாவும் மோதுவார்கள் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முடிவுகள் இறுதியாகும் வரை தமிழக அரசியல் களத்தில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,070. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.