Show all

என்ன பிச்சையா! காவிரி மேலாண்மை வாரியமோ குழுவோ எது அமைத்தாலும் ஏற்க வேண்டுமாம்; தமிழிசை அறிவுறுத்தல்

13,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு வியாழன் அன்று முடிவடையும் நிலையில் மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா இல்லையா என்ற எதிர்பார்ப்பில் காவிரி கழிமுக உழவர்கள் காத்திருக்கின்றனர். 

கர்நாடக தேர்தலை மனதில் வைத்தே நடுவண் அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பதாக குற்றம்சாட்டப் பட்டு வரும் நிலையில், இன்று கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நாளும் அறிவிக்கப்பட்ட நிலையில், நடுவண் அரசோ காவிரி மேலாண்மை வாரியம் என்ற பேச்சே இல்லாமல், ஏனோதானோவென்று ஒரு குழு அமைக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறது.

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், காவிரி மேலாண்மை வாரியமோ குழுவோ நடுவண் அரசு எதை அமைத்தாலும் அதனை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

என்ன பிச்சையா! மக்கள் வழங்கும் வரிப்பிச்சையில்தான் அரசு நடக்கிறது. பாஜக ஆட்களுக்கு ரொம்பதான் தெனாவெட்டு.

தமிழக நலனில் பாஜக அக்கறையோடு இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நடுவண் அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று நேற்று வரை கூறி வந்த தமிழிசை இன்று நடுவண் அரசு எதை அமைத்தாலும் அதனை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். நீட் தேர்விலும் இப்படி நாடகம் நடத்தியவர்தானே இந்த தமிழிசை. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,739.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.