Show all

சொமேட்டோ நிறுவனத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

மதுரையைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளரிடம், ஓரளவுக்காவது ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என சொமேட்டோ ஊழியர் அறிவுறுத்தியதை கண்டித்து உலகம் முழுவதும் தமிழர்கள் கடுமையான எதிர்வினை ஆற்றி வருகின்றனர். நாமும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

02,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: மதுரையைச் சேர்ந்த வாடிக்கையாளரிடம், ஓரளவுக்காவது ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என சொமேட்டோ ஊழியர் அறிவுறுத்தியதை கண்டித்து உலகம் முழுவதும் தமிழர்கள் கடுமையான எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.

மதுரைச் சேர்ந்த விகாசு என்பவர் சொமோட்டோவில் உணவுக்கு கேட்பு கொடுத்திருந்துள்ளார். அவர் கொடுத்த கேட்பில் ஒரு உணவுப்பொருள் கொண்டுதரப்படவில்லை. 

இது குறித்த புகாருக்கு சொமேட்டோ வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டு, தனக்கு ஒரு உணவு கொண்டுதரப்படவில்லை, அதற்குரிய பணத்தை திருப்பித்தர வேண்டும் என கேட்டிருக்கிறார். 

அவருக்கு விடையுரை அனுப்பிய வாடிக்கையாளர் சேவை பிரிவு அதிகாரி, உங்கள் வட்டார மொழி தடையாக இருக்கிறது என்று தெரிவித்து, ஹிந்தி தேசிய மொழி என்று புளுகுரைத்து, ஓரளவு புரிந்து கொள்ளுகின்ற அளவிற்காவது அனைவரும் ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என தனது ஹிந்தி ஆதிக்கப்பாடு மற்றும் ஹிந்தித் திணிப்பு சார்ந்த கருத்துப்பரப்புதலை அள்ளி வீசியுள்ளார். 

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில், இந்தியாவின் தேசிய மொழியாக எந்த மொழிக்கும் தகுதி தரப்படவில்லை. பொய்யாக ஹிந்தி வெறியர்கள், ஹிந்திக்கு தேசிய மொழித் தகுதியைக் கொண்டாடி வருகின்றனர்.  

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில், அட்டவணை எட்டில் தமிழ் உள்ளிட்ட 22 இந்திய மொழிகள் இந்தியாவின் ஆட்சி மொழிகளாக பட்டியல் இடப்பட்டுள்ளன. அதில் ஹிந்தியும், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இந்தியா முழுவதும் வெறுமனே 25000 பேர்கள் மட்டுமே தங்கள் தாய்மொழி என்று குறித்த சமஸ்கிருதமும் உள்ளன.

இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் 17ல் ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்தியை இந்தியாவின்; அலுவல் மொழியாக பதினைந்து ஆண்டுகளுக்குள் நிறுவ முயன்றால், ஆங்கிலத்தை அப்புறப்படுத்திக் கொள்ளலாம் என்று ஹிந்தி வெறியர்களின் ஆர்வத்;திற்கு ஒரு பணிக்கட்டளை (டாஸ்க்) கொடுத்திருந்தார் சட்டமேதை அம்பேத்கார். 

ஆனால் ஹிந்தி வெறியர்களால் சாத்தியப்படுத்த முடியாமல், இந்தியா முழுவதும் எதிர்வினையாற்றி ஆங்கிலமே அலுவல் மொழியாகத் தொடர்ந்து வருகிறது. பதினைந்து ஆண்டுகளில் 'ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்தி' என்கிற பணிக்கட்டளையை முடிக்காமலே ஆறுபது ஆண்டுகளுக்கு முன்னமேயே காலாவதி ஆகிவிட்ட இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் 17ஐ திருத்தாமல் இருக்கின்றனர் நேற்றைய காங்கிரசாரும் இன்றைய பாஜகவினரும். 

மாறாக அனைத்து மாநிலங்களுக்கும் நீட்டிக்க வேண்டிய சிறப்புத்தகுதி 370ஐ இருந்த ஒரு மாநிலத்திலும் அகற்றி பயங்கரவாதத்திற்கு வித்துட்டுள்ளனர் பாஜகவினர்.

சரி- புளுகுனி, ஹிந்தி ஆதிக்க அடாவடி, சொமேட்டோவுக்கு வருவோம். சொமேட்டோவின் விடையுரை கண்டு திகைத்த மதுரையைச் சேர்ந்த விகாசு, இந்த உரையாடல் தொடர்பான திரைப்பிடிப்புகளைத் தன்னுடைய கீச்சுப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். 

அவர் வெளியிட்டிருந்த கீச்சு விரைவாகவே தீயானது. மேலும் சொமேட்டோவின் பொறுப்பற்ற பதிலை கண்டித்து 'சொமேட்டோவை நீக்குவோம்' என்று பதிவிட, இது கீச்சுவில் இன்றைய தலைப்பாகியது.

இதன் விளைவாக ஒன்றியப் பங்குச் சந்தையில் சொமேட்டோ நிறுவன பங்குகள் சரிவை சந்திக்கும் வகைக்கு தமிழர்களின் எதிர்வினை, செயலாக்கம் பெற்றது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,041.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.