Show all

வைகோ பிணையில் விடுதலை

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியது தேசத்துரோகம் என்று கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு பிணை அளித்து சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

     விடுதலைப்புலிகள் இயக்கம் ஈழத்தமிழர்களுக்கான விடுதலை இயக்கம்; தீவிரவாத இயக்கமல்ல. என்று பாமக, நாம்தமிழர் கட்சி எனும் பல்வேறு தமிழர் அடிப்படை காக்க முயலும் கட்சிகளுக்கு முன்பிருந்தே பேசி வருபவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

அவர், கடந்த2009ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றிலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசினார்.

     இதனையடுத்து வைகோவின் இந்தப் பேச்சு நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

     பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு தொடர்பாக, கடந்த ஏப்ரல்.3ஆம் தேதி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வைகோ நேரில் அணியமானார். இதன் பின்னர், நீதிமன்ற உத்தரவினைத் தொடர்ந்து அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

வைகோ, நேற்று பிணை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது அரசுத் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்காததால் அவரைப் பிணையில் விடுவிக்க நீதிஅரசர் உத்தரவிட்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.